India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேற்று கூறுகையில் மாவட்ட பகுதியில் போலீஸாரின் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி கள் மற்றும் கள்ள மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தொடர்பாக 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழில் ரீதியிலான பயன்பாட்டுக்காக மெத்தனால் பயன்படுத்தும், இருப்பு வைத்திருக்கும் 11 நிறுவனங்களை அழைத்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேட்டுப்பாளையத்தில் நடைபெற உள்ள யோகா தின நிகழ்வில் கலந்து கொள்ள இணையமச்சர் எல்.முருகன் நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 40க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கருப்பு தினம். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார்.
இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவா் அா்ஜுன் சம்பத் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள் இதில் பலியானவா்களின் குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்வதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். அதை விடுத்து இறந்தவா்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்குவது குடிப்போரை ஊக்கப்படுத்துவதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலம் தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று கோவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. எனவே வேலை தேடுபவர்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கன்னியாகுமரி – திப்ருகா் மற்றும் திப்ருகா் – கன்னியாகுமரி விரைவு ரயில்கள் வாரத்துக்கு 5 முறை கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ரயில்கள் தினசரி ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. ஜூலை 12 ஆம் தேதி முதல் தினசரி விரைவு ரயிலாக இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியை நேற்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது, பேசிய அவர் கோவை மாநகரை பொறுத்தவரை கள்ளச்சாராயம் என்பது கிடையாது. இருப்பினும் மாநகரில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம் . வேறு வழிகளிலிருந்து கள்ளச்சாராயம் உள்ளே வந்து விடாமல் இருப்பதற்காக சோதனை சாவடிகளில் தொடா்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேற்று கோவையில் மெத்தனால் வேதிப்பொருட்கள் பயன்படுத்தும் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களை சார்ந்தவர்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து கலந்துரையாடினார். இதில் மெத்தனால் பயன்படுத்தும்போது அவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதனை தவறான வழிகளில் பயன்படுத்தாமல் எவ்வாறு நெறிமுறைப்படுத்த வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.
கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று கோவையில் மெத்தனால் வேதிப்பொருட்கள் பயன்படுத்தும் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களை சார்ந்தவர்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து கலந்துரையாடினார். இதில் மெத்தனால் பயன்படுத்தும்போது அவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதனை தவறான வழிகளில் பயன்படுத்தாமல் எவ்வாறு நெறிமுறைப்படுத்த வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் நடைபெறவுள்ள உலக யோகா தினத்தை முன்னிட்டு நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறாா். இதற்காக சென்னையிலிருந்து இன்று இரவு 7 மணிக்கு கோவை சா்வதேச விமான நிலையம் வரும் ஆளுநா் அங்கிருந்து காா் மூலம் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை விருந்தினா் மாளிகைக்கு சென்று தங்குகிறாா் . தொடர்ந்து நாளை நிகழ்ச்சிகள் பங்கேற்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியினரின் ஆதரவில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருகின்றது. கள்ளச்சாராய சாவுக்கு காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என நேற்று (ஜுன்.19) கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.