India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி 25.06.2024 மற்றும் 26.06.2024 ஆகிய 2 நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். இங்கு, மசாலா பொடிகள் தயார்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், ஆகியவற்றிற்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக இன்று வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், கோவை மாநகர், அவினாசி சால ஹோப்ஸ் பகுதி இரயில்வே மேம்பாலம் அருகில் நாளை முதல் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, லட்சுமி மில்ஸ், காமராஜர் ரோடு, சந்திப்பில் இருந்து அவினாசி மார்க்கமாக செல்லும் Tidel Park சாலை வழியாக அவினாசி சாலையை அடைந்து செல்லலாம் என்று தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று மாலை விடுத்துள்ள செய்தி குறிப்பில், மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கடந்த மே.1 முதல் இதுவரை போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 182.725 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவையில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கோவையில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக 12 முதல் 20 செ.மீ. மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை அரசு கல்லூரி முதல்வர் நேற்று கூறுகையில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 24 ஆம் தேதி துவங்கவுள்ளது. இதில் 291 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மாணவர்களின் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கும் பணி உள்ளிட்டவை நடந்து வருகின்றன. கலந்தாய்வு நிறைவடைந்த பின்னர் அரசு அறிவுறுத்தலின்படி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஜூலை.3 ஆம் தேதி துவக்கப்படும் என்றார்.
கோவை எஸ்பி பத்ரிநாராயணன் நேற்று கூறுகையில், மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1,092 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை தவிர 203 லிட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 33 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் சட்டத்திற்கு புறமாக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக் குமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜூன் 2024ஆம் மாதத்திற்கான உற்பத்தி குழு கூட்டம் ஜூன்.19ஆம் தேதி காலை 9.30 மணியளவிலும், அதனைத் தொடர்ந்து, காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சித்தலைவரால் நடத்தப்பட உள்ளது என்றார்.
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூன்.21) தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கோவை உட்பட 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.