India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் 2024-2025ஆம் நிதியாண்டில் சட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. சட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் தங்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்ய தேவையான சட்டப் புத்தகங்கள் வாங்க நிதியுதவி வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என நேற்று (ஜுன் 26) மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கபட்டது. இதில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜெயபால், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் மைய நிர்வாகிகளுக்கான கூர் உணர்திறன் பயிற்சி, நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்தக் கூடாது என எச்சரித்தார்.
கோவை உட்பட 8 மாவட்டங்களில் இன்று (ஜூன் 26) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் மாவட்ட தொழில் மையம் சார்பில் கடந்த ஆண்டு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 55 பேருக்கு ரூ.6.79 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் 927 பேருக்கு ரூ.49.70 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவையில் அம்பேத்கர் சிலை வைக்க மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியத. இதையடுத்து அனைத்து துறைகளும் அனுமதி அளித்துள்ளது. கோவை மாநகர காவல் துறை மட்டும் அனுமதி மறுக்கப்பட்டு வருவதை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோவை மாவட்ட ஆட்சியருக்கும், மாநகர காவல் ஆணையருக்கும் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணனுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கும் பணிக்கு தகுதியுள்ள வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். பணி நியமனம்செய்யப்படும் சட்ட ஆலோசகர் மாவட்ட எஸ்பி நிர்வாகத்திலும், குற்ற வழக்குகளிலும் ஆலோசனை வழங்குபவராக செயல்பட வேண்டும். அவருக்கு மாத ஊதியமாக ரூ.20,000/- வழங்கப்படும் என இன்று (ஜுன்25) எஸ்பி பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கணபதி ராஜ்குமார், கோவை மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
கோவை ஈஷா யோக மையத்தினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் இருக்கும் தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்கள், வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் ‘ஜூன் 27 ஆம் தேதி (வியாழக்கிழமை)’ ஒரு நாள் மட்டும் மூடப்படுவதாகவும், அன்று பக்தர்கள் ஈஷாவிற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தங்களது அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளனர்
கோவை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் புதிதாக இயற்றப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய கோரி ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.