Coimbatore

News July 2, 2024

கோவை: GST செலுத்துவோர் எண்ணிக்கை 204% அதிகரிப்பு

image

கோவை ஜிஎஸ்டி, மத்திய வரிகள் ஆணையரகத்தில் GST தின விழா நேற்று(ஜூலை 1) நடைபெற்றது. விழாவுக்கு மத்திய வரிகள் ஆணையா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 2017-ல் GST அமல்படுத்தப்பட்டபோது கோவை ஆணையரகத்தில் 26,744 பேர் மட்டும் வரி செலுத்துபவா்களாக இருந்தனா். ஆனால் 2023 – 2024 ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 81,552 ஆக உயா்ந்துள்ளது. இது 204% அதிகரிப்பாகும் என்றார்.

News July 2, 2024

கோவை: மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி

image

கோவை கணபதி சிஎம்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் சிஎம்எஸ் கோப்பைக்கான 29ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான இன்விடேஷனல் வாலிபால் போட்டி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. மாணவர் பிரிவில் 29 அணிகள் மற்றும் மாணவியர் பிரிவில் 23 அணிகள் என 50க்கும் மேற்பட்ட அணிகள் நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டியிட்டனர். போட்டிகளில் கலந்து கொண்டு மாணவர்கள் தங்களது விளையாட்டு திறமையினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

News July 1, 2024

நீட் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் நாடகம்: அண்ணாமலை

image

பாஜக சார்பில் கோவை தொகுதி ஆய்வு கூட்டம் கோவை நீலாம்பூரில் நேற்று(ஜூன் 30) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில தலைவர் அண்ணாமலை, “நீட் தேர்வை பொருத்தவரை வெள்ளை அறிக்கை கொடுக்க மறுப்பதோடு உச்சநீதிமன்றம் செல்லவும் மறுக்கின்றனர். தரவுகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றத்துக்கு செல்லவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடகமாடி வருகிறார்” என பேசினார்.

News July 1, 2024

கோவை: 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

கோவை மாவட்டத்தில் இன்று(ஜூலை 1) மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 1, 2024

கரும்பு சாகுபடி: வேளாண்துறை அறிவுறுத்தல்

image

1.கரும்பு நடுவதற்கு முன் குளத்து மண் இட்டால் அதிக மகசூல் பெறலாம்; 2.ஆட்டு புழுக்கையை உரமாக பயன்படுத்தினால் சக்கரை தன்மை அதிகரிக்கும்; 3.கரும்பு வளர வளர சோகையை உரிப்பதால் செதில், மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 4. அடிக்கடி நீர் பாச்சுவதால் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 5. பயிர் செய்து 3 மாதங்களில் சூளை சாம்பல், வேப்பங்கொட்டை தண்ணீர் தெளித்தால் இளந்தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.

News July 1, 2024

கோவை: காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

கோவை மாவட்டத்தில் இன்று(ஜூலை 1) காலை 10 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 30, 2024

வேதனை தெரிவித்த பொள்ளாச்சி ஜெயராமன்

image

பொள்ளாச்சி அடுத்த உடுமலையில் கள்ள சந்தையில் மது வாங்கி குடித்து உடல் பாதிக்கப்பட்டு கோவையில் சிகிச்சை பெறும் மகேந்திரன் என்பவரை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர், அமுல் கந்தசாமி ஆகியோர் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் பேசிய ஜெயராமன் உடுமலை அடுத்த மாவடப்பு பகுதியில் நீண்ட நாட்களாக கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவது வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.

News June 30, 2024

கோவை: வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்

image

கோவை மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வயிற்றுப்போக்கால் ஏற்படும் இறப்புகளை கட்டுப்படுத்த தமிழக அரசு சாா்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 29, 2024

அரசியல் கட்சி தலைவர் மனைவி பலி

image

கோவை மாவட்டத்தில் திராவிடர் தமிழர் கட்சி செயல்ப்பட்டு வருகிறது. இதன் நிறுவனதலைவராக வழக்கறிஞர் வெண்மணி உள்ளார். இவரது மனைவி சாவித்திரி (49). இவர் இன்று (ஜுன்29) தனது வீட்டில் துணி துவைத்துக் கொண்டு இருந்த பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது குறித்து செட்டிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News June 29, 2024

சுகாதார அலுவலர் வெளியிட்ட தகவல்

image

கோவை மாவட்ட சுகாதார அலுவலர் இன்று (ஜுன்29) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வைட்டமின் “ஏ” என்ற திரவம் நாடு முழுவதும் 5 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 01.07.24 முதல் 31.07.23 வரை கோவையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வைட்டமின் “ஏ” இலவசமாக வழங்கப்பட உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!