India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அடுத்த, சுங்கம் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே கேட்டை, கடக்க முயன்ற இளைஞர் ஒருவர் மீது, ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், போத்தனூர் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள பட்ஜெட் தொடரில் பொள்ளாச்சி தனிமாவட்டமாக அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோவை மக்களே இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் செய்யவும். மேலும், Share பண்ணுங்க.
கோவை மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் -கொச்சின் சாலையில் மரப்பாலத்தில் அமைந்துள்ள இரயில்வே கீழ் பாலத்தை திரும்பக்கட்டும் பணி நடைபெற உள்ளதால், இன்று முதல் வாளையாறு மற்றும் பாலக்காட்டிலிருந்து, கோவை, குனியமுத்தூர், உக்கடம் செல்லும் பேருந்து மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் செட்டிபாளையம் பிரிவு, விறகுக்கடை பாலம் வழியாக சென்று ACC CEMENT FACTORY சாலை வழியாக செல்ல வேண்டும் என்றார்.
கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச் 13) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
கோவை, சோமனூரை அடுத்து அமைந்துள்ளது புகழ்பெற்ற வாழைத்தோட்டத்து அய்யன் கோயில். மிகவும் சக்திவாய்ந்த அய்யனை வழிபட்டால், தீராத நோய்களும், தோஷங்களும் நீங்குமாம். இங்கு பிரசாதமாக வழங்கப்படும் புற்றுமண், பாம்பு விஷத்தை முறிக்கும் வல்லமை கொண்டதாம். அய்யன் கோயிலில் கிடைக்கும் புற்றுமண்னை, சிறிது எடுத்து வீடுகளிலும், வயல்வெளிகளிலும் தெளித்தால், அங்கு விஷ ஜந்துக்கள் போன்றவை அண்டாது என்பது மக்களின் நம்பிக்கை.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, பில்லூர் 3, ஆழியார் மற்றும் பவானி ஆகிய ஆறு குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த திட்டங்களுக்காக நீர் எடுக்கப்படும் அணைகளில் நீர்மட்ட எந்தளவு உள்ளது என்பதை கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, சிறுவாணி அணையின் மொத்த அளவு 49.53 அடியாகும்.
கோவையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக கடந்த 2024 ஆம் ஆண்டில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சொக்கலிங்கம் (54) வஉசி மைதானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரோந்து பணியிலிருந்த காவலர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச் 12) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் எம்.பி.வேலுமணி இல்ல திருமண வரவேற்பு விழாவிற்கு எந்தவித முன் அனுமதியும் பெறாமல் போக்குவரத்துக்கு இடையூறாக கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஜென்னிஸ் ரெசிடென்சியிலிருந்து கொடிசியா வளாகம் வரை கட்சி கொடிகளையும் பேனர்களையும், வரவேற்பு பதாகைகளையும் வைத்ததாக பீளமேடு போலீசார் வார்டு செயலாளர் லட்சுமணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 12) 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனியில் இன்று (மார்ச் 12) கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் (மார்ச் 12, 13) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.