Coimbatore

News July 10, 2024

முக்கிய அணைகளின் நிலவரம்

image

பி.ஏ.பி. பாசன திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் இன்று(ஜூலை 10 ) காலை 8 மணி நிலவரப்படி சோலையாறு அணையின் நீர்மட்டம் 111.07 அடியாகவும், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 23.80 அடியாகவும், ஆழியார் அணையின் நீர்மட்டம் 87.15 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 28.83 அடியாகவும் உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News July 10, 2024

கோவை மாணவி 2 ஆம் இடம்

image

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் கோவை மாணவி அனூப் 2 ஆம் இடம் பிடித்துள்ளார். சேலம் மாணவி ராவணி முதலிடமும், வேலூர் மாணவர் சரவணம் 3 ஆம் இடமும் பிடித்துள்ளனர். பொறியியல் கலந்தாய்வு வரும் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

News July 10, 2024

கோவையில் இம்மாத இறுதிக்குள் தேர்தல்?

image

கோவை மாநகராட்சி மேயர் பொறுப்புக்கு இம்மாத இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் கோவை மேயர் ராஜினாமா செய்த நிலையில் மாத இறுதியில் மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர் பிரச்னைகளுக்கு மத்தியில் மேயர் ராஜினாமா செய்த நிலையில் பொறுப்பு மேயராக தற்போது துணை மேயர் உள்ளார்.

News July 10, 2024

கோவை வேளாண் பல்கலையில் நுழைவுத் தேர்வு ரத்து

image

கோவை மருதமலை சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் ரத்து செய்யபட்டுள்ளது எனவும், இது குறித்த முழுமையான தகவல்கள் இன்று(ஜுலை10) வெளியிடப்படும் எனவும் பல்கலைகழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இது குறித்த தெளிவான விளக்கத்தை பின்னர் பெறலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

News July 9, 2024

கோவையில் நாளை விழிப்புணர்வு பேரணி

image

கோவை மாவட்டத்தில் நாளை (10.07.2024) காலை 9.30 மணியளவில் பந்தயசாலை பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ரத பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளதாக இன்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

கோவை ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி உணவகம்

image

தமிழகத்தில் ரயில்வே துறைக்கு அதிக வருமானம் ஈட்டிக் கொடுக்கும் 2ஆவது ரயில் நிலையம் கோவை ரயில் நிலையம். இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு இருக்கும் ரயில் பெட்டி உணவகம் போல், கோவையிலும் ரயில் பெட்டி உணவகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான டெண்டர் அடுத்த மாதம் நடைபெறும் உள்ளது. இந்த ரயில் பெட்டி உணவகம் பயணிகளிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

News July 9, 2024

வேளாண் பல்கலையில் புதிய பட்டய படிப்புகள் அறிமுகம்

image

கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி நேற்று(ஜூலை 8) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட குடில்களில், தோட்டக்கலை செடிகள் வளா்ப்பு தொழில்நுட்பங்கள், ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தோட்டக்கலை பயிா்களின் சாகுபடி, செயற்கை நுண்ணறிவுடன் இணையவழி தொழில்நுட்பங்கள், ஆளில்லா வான்கல தொழில்நுட்பம் உள்ளிட்ட பட்டய படிப்புகள், கூடுதல் சான்றிதழ் படிப்புகளும் நடைபெற உள்ளன என்றார்.

News July 9, 2024

கோவை: SP கார் மோதி விபத்து; மேலும் ஒருவர் பலி

image

நீலகிரி SP சுந்தரவடிவேலுவின் மனைவி சென்ற கார் நேற்று மேட்டுப்பாளையம் கல்லாறு அருகே சென்றபோது, எதிரே வந்த டூவீலர் மீது மோதிய விபத்தில் இளைஞர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர். இருவரையும் மீட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அல்டாப் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கல்லூரி மாணவர் முகமது ஜுனைத்தும் இன்று காலை உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 8, 2024

கோவை: தனிமையில் வசிக்கும் பெண்கள் கவனத்திற்கு..!

image

கோவை மாநகர காவல்துறை நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், தனிமையில் இருக்கும் மகளிர் பொது இடங்களுக்கு செல்லும்போது அறிமுகம் இல்லாத, முன்பின் தெரியாத நபர்களுடன் பழக்கம் மற்றும் நட்பு ஏற்படுத்தி கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். தொடர்பு எண்களை முன்பின் அறியாத நபர்களிடம் பகிராமல் இருப்பது பாதுகாப்பானது. சந்தேகம் ஏற்பட்டால் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News July 8, 2024

கோவை மேயரின் ராஜினாமா கடிதம் ஏற்பு

image

கோவை மாநகாரட்சியில் தொடர் பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில் மேயராக இருந்த கல்பனா கடந்த 3 ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து இன்று(ஜூலை 8) மாநகாரட்சி கூட்டம் கூடியது. இதில் மேயர் கல்பனாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. ராஜினாமா கடிதத்தை வாசிக்கும்போது திமுக – அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து 9 நிமிடங்களில் சிறப்பு கூட்டம் முடிவடைந்தது.

error: Content is protected !!