India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்ட கல்வி அலுவலகம் நேற்று செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், “தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ மாணவர்களுக்கு அரசு நிா்ணயம் செய்த கல்வி கட்டண பட்டியலை மாணவா்கள், பெற்றோா்கள் பார்க்கும்படி அறிவிப்பு பலகையில் ஒட்டி அதன் புகைப்பட நகலை மாவட்ட கல்வி அலுவலா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். பெற்றோர்களுக்கு இமெயில், வாட்ஸ்அப் மூலம் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
காமராஜரின் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, கோவை தென்னமநல்லூர் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை திமுக மாவட்ட செயலாளர் தொ.அ ரவி இன்று துவக்கி வைத்தார். இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 100 அடியில் 87 அடியில் நீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3041 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. மேலும், 6000 கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் நாளை (ஜூலை 15) முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில் (ஜூலை 15,16) நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னையில் 3 பேருக்கும், கோவையில் 3 பேருக்கும் கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தற்போது மொத்தம் 6 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக இன்று சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த 01.05.2024 முதல் இன்று வரை மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனையில் 130 நபர்களை கைது செய்து, 114 பேர் மீது வழக்குபதிவு செய்தும், 16 பேரை எச்சரிக்கை செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 3,394 கிலோ 96 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்று கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.
கோவை ரயில்வே துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; கோவை வழியாக இயக்க திட்டமிடப்பட்டுள்ள பொடானூர்-இருகூர் ரயில் எண்.13352 ஆலப்புழா-தன்பாத் டெய்லி எக்ஸ்பிரஸ் வழியாக பின்வரும் ரயில் சேவைகள் திருப்பி விடப்படும். ரயில் எண்.12678 எர்ணாகுளம் ஜேஎன்-கேஎஸ்ஆர் பெங்களூரு டெய்லி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் வழியாக 16, 18, 20, 23, 25, 27 & 30 ஆகிய தேதிகளில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை, தஞ்சை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு 1000 மூத்தகுடிமக்கள் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை hrce.tn.gov.in என்ற இணைதள முகவரியில் விண்ணப்பித்து இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். வரும் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை செளரிபாளையத்தில் உள்ள சின்னசாமி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிலம்பத்தை வளர்க்க செயலாற்றி வருகிறார். 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வரும் இவர் எவ்வித கட்டணம் வசூலிக்காமல் போட்டிகளுக்கும் அழைத்து சென்று வருகிறார். உலக சிலம்பம் ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில் அண்மையில் சென்னை கவர்னர் மாளிகையில் ஆளுநர் ரவி சிலம்பம் செம்மல் விருதினை இவருக்கு விருது வழங்கினார்.
பேரூர், மேட்டுப்பாளையம், அன்னுார், பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை தாலுகா உட்பட 20 தாசில்தார்கள் மாற்றப்பட்டுள்ளனர். நிர்வாக நலன் கருதி இடமாற்றம் செய்யப்பட்டதாக கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். தங்களுக்கு வழங்கப்பட்ட பணியிடத்தில் உடனடியாக சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுப்பில் சென்றாலோ பணியில் சேராமல் இருந்தாலோ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.