India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று(ஜூலை 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக கோவை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி முத்து கவுண்டர் அவென்யூவில் வசித்து வரும் வெங்கட்ராமன் என்பவரின் மனைவி கிட்டம்மாள்(82). இவர் கோவையில் கடந்த மே 1ஆம் தேதி ‘இந்தியன் ஃபிட்னஸ் ஃபெடரேஷன்’ சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் முதல் முயற்சியிலேயே 50 கிலோ எடையை தூக்கி 5ஆம் இடம் பெற்றார். இந்நிலையில் மும்பையில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க கிட்டம்மாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த பல்வேறு முக்கிய சிகிச்சை பிரிவுகள், பழைய கட்டடத்தில் இருந்து ரூ.168 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 6 தளங்கள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் புது மருத்துவமனையில் தினமும் 300 உள் நோயாளிகளையும், 1000 வெளி நோயாளிகளையும் கையாள முடியும் என இன்று(ஜூலை 12) நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று(ஜூலை 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசுப் பொருட்காட்சியானது இன்றுடன் முடிவடைவதையொட்டி, பொதுமக்கள் அரசுப் பொருட்காட்சியினை கண்டுகளிக்கும் வகையில் வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று(ஜூலை 12) மற்றும் நாளை(ஜூலை 13) ஆகிய இரு தினங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சேலம் ரயில்வே நிர்வாகம் நேற்று(ஜூலை 11) வெளியிட்ட செய்திக் குறிப்பில், பீளமேடு ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் எழும்பூர் – மங்களூரு சென்ட்ரல் விரைவு ரயில், குமரி மற்றும் புதுதில்லி – திருவனந்தபுரம் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் ஜூலை 14, 15, 17 தேதிகளில் போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படும். இவை கோவை நிலையம் செல்வது தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(ஜூலை 11) நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 1048 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- மதிப்பிலான வைப்புநிதிப் பத்திரங்களை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். இதில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி என பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எஸ்பிஐ பேருந்து நிலையம் அருகே புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட நுழைவாயிலை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி இன்று(ஜூலை 11) திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் புதிய நுழைவாயில் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார் என பலரும் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவாயிலை அமைச்சர் முத்துச்சாமி இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; கோவை மேயராக இருந்த கல்பனா உடல்நிலை சரியில்லை என்று தான் ராஜினாமா கடிதத்தை வழங்கி இருப்பதாகவும், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு என்று கூறுவது பொருத்தமற்றது என தெரிவித்தார்.
கோவை உடையாம்பாளையத்தில் சர்வா ஐடெக் சொல்யூசன்ஸ் லிட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் பொதுமக்களிடம் முதலீடுகளுக்கு அதிக இலாபம் தருவதாக கூறி ஏமாற்றியுள்ளது. இப்புகாரின் பேரில் இயக்குனர்கள் ரிதுவர்ணன், கவுத் ஸ்ரீஹரி, வெலக்கப்பாடி பாலன் நாராயணன் உள்ளிட்டோரை கோவை பொருளாதார குற்றப்பிரிவு கைது செய்து விசாரித்து வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.