India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று(ஜூலை 13) இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக கோவை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிக்குள்ளாக இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கோவை விமான துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; கோவை விமான நிலையத்திலிருந்து பிற மாநிலங்களுக்கான உள்நாட்டு சரக்கு போக்குவரத்து சேவை, பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு சரக்கு விமான போக்குவரத்து சேவை, வருகின்ற ஜூலை 16 முதல் மீண்டும் செயல்படும் என்றார்.
கோவை டவுன்ஹாலில் உள்ள ஜவுளி, நகை, மளிகை, பேன்ஸி கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சாலையில் நின்று மக்களை வலுக்கட்டாயமாக தங்கள் கடைகளுக்கு இழுத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிலர் சாலையில் செல்லும் பெண்களின் கையை பிடித்து இழுத்து அத்துமீறுவதாகவும் புகார் எழுந்தது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சர்தார், மேரி உள்ளிட்ட இருவரை நேற்று கைது செய்தனர்.
கோவை எஸ்பி அலுவலகம் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த மே 1 முதல் இதுவரை மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர்களிடம் இருந்து 3329.17 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேற்று(ஜூலை 12) வெளியிட்ட அறிக்கையில், 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான வரி வசூல் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில், வரி செலுத்தும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பின்படி, திங்கள் முதல் சனிக்கிழமை வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) அனைத்து நாட்களிலும் வரி வசூல் மையங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை 9.30 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே வெளியே செல்லும் பொதுமக்கள் அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த மழையால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்படலாம்.
கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் 2 காவல் உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குனியமுத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் அகஸ்டின் பிரபு ஆகிய இருவரும் சட்ட ஒழுங்கிற்கு பாதகமான செயலை செய்தாக கூறப்படுகிறது. இதனை அறிந்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இருவரையும் நேற்று(ஜூலை 12) தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டங்கள் இன்று மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை விமானப்படைத்தளத்தில் பன்னாட்டு விமான படையின் கூட்டு பயிற்சி நடைபெறுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் விமான படை கமெண்டன்ட் விவர்த் சிங், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா என பலரும் கலந்து கொண்டனர்.
கோவை தெற்கு தொகுதிக்குயின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; மு க ஸ்டாலின் முதல்வராகி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த மூன்று ஆண்டுகளும் மத்திய அரசை மட்டுமே குறை கூறி வருகின்றார். தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் திட்டங்கள் வந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு கராத்தே சங்கம் சார்பில் 4-13 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கராத்தே போட்டி சென்னை வேல்ஸ் சர்வதேச பள்ளியில் அண்மையில் நடந்தது. மாணவர்களுக்கு பல்வேறு எடை பிரிவுகளில் கட்டா, குமிதே போட்டி நடத்தப்பட்டது. இதில் கோவை சார்பில் பங்கேற்ற மாணவர்கள் 7 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்று அசத்தினர். பதக்கம் வென்ற மாணவர்களை மாவட்ட கராத்தே சங்கத்தினர் நேற்று பாராட்டினர்.
Sorry, no posts matched your criteria.