India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை இந்து முன்னணியின் சார்பில் இந்து வியாபாரிகள் நலச்சங்க அறிமுக கூட்டம், இளைஞர்கள் இணைப்பு விழா ராம் நகரில் உள்ள ஐயப்ப பூஜா சங்கத்தில் இன்று நடந்தது. இதில் அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். அப்போது, பேசிய அவர் நீதிபதி சந்துரு கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்டவர். இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பரிந்துரை செய்துள்ள அவரின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.
கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று கூறுகையில் பயோ – சிஎன்ஜி திட்டத்துக்கு ஏற்கனவே ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பயோ மைனிங் முறையில் ஏழு லட்சம் கன மீட்டர் அளவிலான குப்பைகளை அழிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெண்டரும் வழங்கப்பட்டுள்ளது. புதிய எந்திரங்கள் வாயிலாக ஓராண்டுக்குள் குப்பைகள் முழுவதையும் அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், மதுரை உள்பட 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சைமா நடத்தும் டெக்ஸ்பேர் 2024 கண்காட்சியின் 14ஆவது பதிப்பு அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. நாளை நிறைவு பெறும், இந்த கண்காட்சியை காலை 10 முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பார்வையிடலாம். புதிய தொழில்நுட்பங்களுடன் வெளிவந்துள்ள ஜவுளி இயந்திரங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன . கண்காட்சியில் இயந்திரங்களை பதிவு செய்வோருக்கு தள்ளுபடி சலுகைகளை அளிக்கின்றன.
கள்ளக்குறிச்சி சாராய விவகாரம் குறித்து நேற்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை சந்தித்த மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மட்டும் தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை விட இரண்டரை மடங்கு டாஸ்மாக் கடைகள் உள்ளன. திமுக தலைவா்களுக்கும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவா்களுக்கும் இருக்கும் தொடா்பை சிபிஐ விசாரித்தால் தான் முழு உண்மை வெளியே வரும் என்றாா்.
சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு – திருச்சி பயணிகள் ரயில் ஜூன் 27 ஆம் தேதி பாலக்காடு – கரூா் இடையே மட்டுமே இயக்கப்படும். கரூா் – திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, திருச்சி- பாலக்காடு பயணிகள் ரயில் திருச்சி – கரூா் இடையே ஜூன் 27ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி 25.06.2024 மற்றும் 26.06.2024 ஆகிய 2 நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். இங்கு, மசாலா பொடிகள் தயார்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், ஆகியவற்றிற்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக இன்று வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், கோவை மாநகர், அவினாசி சால ஹோப்ஸ் பகுதி இரயில்வே மேம்பாலம் அருகில் நாளை முதல் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, லட்சுமி மில்ஸ், காமராஜர் ரோடு, சந்திப்பில் இருந்து அவினாசி மார்க்கமாக செல்லும் Tidel Park சாலை வழியாக அவினாசி சாலையை அடைந்து செல்லலாம் என்று தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று மாலை விடுத்துள்ள செய்தி குறிப்பில், மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கடந்த மே.1 முதல் இதுவரை போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 182.725 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவையில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கோவையில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக 12 முதல் 20 செ.மீ. மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.