Coimbatore

News March 15, 2025

பள்ளி விழாவில் பங்கேற்கும் மயில்சாமி அண்ணாதுரை

image

நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா வரும் 19ந் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், சந்திரயான் -1 திட்ட இயக்குநர்.மயில்சாமி அண்ணாதுரை,கலந்து கொண்டு சிறப்புரை வழங்க உள்ளார். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் தங்கராசு, உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 

News March 15, 2025

ரயில் பயணிகள் கவனத்திற்கு 

image

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மார்ச்.16ல் ஆலப்புழை – தன்பாத் விரைவு ரயில், எர்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில் ஆகியவை போத்தனூா்- இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையம் செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் தற்காலிக நிலையமாக செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 15, 2025

முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்

image

கோவை கலெக்டர் பவன் குமார் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைகேட்பு முகாம் மற்றும் சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கு கூட்டம் வரும் மார்ச்.20 ஆம் தேதி கலெக்டர் பவன் குமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமினை பயன்படுத்தி பயன்பெற அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

News March 15, 2025

கோவையில் பாடுவது மிகவும் மகிழ்ச்சி: ஹாரிஸ் ஜெயராஜ்

image

கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் இன்று (மார்ச்.15)  “Rocks on Harris” என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து நேற்று ஹாரிஸ் ஜெயராஜ் செய்தியாளர் சந்திப்பில், 36 பாடல்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு தொடங்கி இருப்பதாகவும் கோவையில் பாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

News March 15, 2025

குழந்தைகள் வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு

image

கோவை மாவட்டத்தில் மார்ச்.17 முதல் 22 வரை குழந்தைகளுக்கான வைட்டமின் ‘ஏ’ திரவம் இலவசமாக வழங்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த திரவம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் 6 மாத முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படும். இந்நிகழ்ச்சி அரசு மருத்துவமனைகள் தற்காலிக முகாம்களில் நடைபெறும். குழந்தை வைத்திருப்பவர்களுக்கு ”SHARE” பண்ணுங்க

News March 15, 2025

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி

image

காரமடையை அடுத்துள்ள பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரது மகன் லோகேஷ்(16). இவர் தனது உறவினர்களுடன் நேற்றிரவு காரமடை கோவில் தேர்த்திருவிழாவிற்கு வந்துள்ளார். பின், மீண்டும் உறவினர்களுடன் இன்று அதிகாலை ஆட்டோவில் வீடு திரும்பும் போது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லோகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றும் மூவரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 14, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (14.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 14, 2025

கோவை சாரதாம்பாள் கோயில்

image

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் புகழ்பெற்ற சாரதா அம்மன் கோயில் உள்ளது. இங்கு மற்ற சீற்றம் கொண்ட அம்மனை போலல்லாமல், சாரதாம்பாள், இனிமையான முகம், அழகான ஈர்ப்பு, அமைதியான அம்சங்களுடன் காட்சி தருகிறாள். கோவையில் முக்கிய தெய்வங்களில் ஒன்றாகவும், மிகவும் சக்தியவாந்தவளாகவும் விளங்கும் சாரதாம்பாளை வணங்கினால், அனைத்து தடைகளும் நீங்குவதோடு, மன அமைதி கிடைக்குமாம். குடும்பத்துடன் ஒருமுறை சென்று பாருங்க.

News March 14, 2025

வேலைவாய்ப்பு முகாம்: மிஸ் பண்ணிடாதீங்க

image

கோவை, ஆனைமலையில் நாளை மார்ச்.15ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள விஆர்டி அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில் 8, 10, 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதை மற்றவர்களுக்கு Share பண்ணுங்க.

News March 14, 2025

கோவைக்கு பட்ஜெட் அறிவிப்புகள்

image

▶ கோவை வெள்ளலூர் பகுதியில் தொல்லியல் அகழாய்வு நடைபெறவுள்ளது.
▶ கோவையில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க ரூ.400 கோடியில் திட்டம்.
▶ கோவையில் புதிதாக 3 மாணவியர் விடுதிகள்.
▶ கோவையில் புதிதாக அன்புச் சோலை மையங்கல்.
▶ பேரூரில் புதிய தொழிற்பயிற்சி நிலையங்கல்
▶ கோவை-சூலூரில் செமி கண்டக்டர் இயக்கம்.
▶ கோவையில் பம்ப் மோட்டார் உற்பத்தி தொழில் மையம்.
▶ கோவையில் 75 மின்சார பேருந்துகள்

error: Content is protected !!