India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை விமானத்துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து, அபுதாபிக்கு இண்டிகோ விமான தொடங்கப்படுகிறது. காலை 7.30 மணிக்கு கோவை விமான நிலையத்தில் புறப்படும் இண்டிகோ விமானம், பிற்பகல் 11:30 மணிக்கு அபுதாபி சென்றடையும். அபுதாபியில் பிற்பகல் 1 மணிக்கு கிளம்பும் இண்டிகோ விமானம், மாலை 6.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடையும் என்றார்.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக கடந்த இரு மாதங்களில் கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாக பரவிவருகிறது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மருத்துவர் அருணா கூறுகையில், கோவை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. ஜூன் மாதத்தில் 34 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் இதுவரை 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள நிலையில் மக்கள் நீா்நிலைகளில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். வெள்ள அபாயம் குறித்து 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், கோவை ரயில் நிலைய பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் கேரளத்தில் இருந்து வரும் ஆலப்புழா – தன்பாத் ரயில், எா்ணாகுளம் – பெங்களூர் ரயில்கள் வரும் 18, 20, 23, 25, 27, 30 ஆகிய தேதிகளில் போத்தனூா் – இருகூா் வழியே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். போத்தனூரில் இந்த ரயில்கள் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தைப் பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு <
கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், 40 எம்பிக்களை கொடுத்த மக்களுக்கு பரிசாக மின் கட்டண உயர்வை கொடுத்திருக்கிறார்கள். இதனால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். மின் கட்டண உயர்வை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
கோவை மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் குழுவின் வழிகாட்டுதலின்படி கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளின் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மாணவர்கள் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் செய்ய விண்ணப்பிக்க கடைசி நாள் 29.7.2024 என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு மைய அதிகாரி பொன் பாண்டியன் இன்று தெரிவித்துள்ளார்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றும் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள சின்னம்பாளையத்தில் சாலையை கடக்க முயன்ற நீலகிரி மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி கருணாநிதி மீது அதிக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நீலகிரி மாவட்ட நீதிபதி கருணாநிதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய மர்ம ஆசாமி நிற்காமல் விரைந்து சென்றார். இந்த விபத்து தற்செயலா, இல்லை திட்டமிட்டதா எனப் போலீசார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.