Coimbatore

News July 18, 2024

கோவையில் 756 மி.மீ. மழை பதிவு

image

கோவை மாவட்டத்தில் நேற்று முதல் இன்று(ஜூலை 18) காலை பெய்த மழை அளவு குறித்த விரிவான அறிக்கையை பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிறுவாணி – 47 மி.மீ., மக்கினாம்பட்டி – 32 மி.மீ., பொள்ளாச்சி – 30 மி.மீ., ஆழியாறு – 15.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் 756 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரியாக கோவையில் 32.87 மி.மீ. மழை பதிவாகியுள்ளது

News July 18, 2024

தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் புதிய ரயில் சேவை

image

தென்னக ரயில்வே இன்று(ஜூலை 18) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் புதிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் முதல் சேவையை நாளை(ஜுலை 19) மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

பிஏபி அணைகளின் நீர்மட்டம் விவரம்

image

பிஏபி பாசன திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் இன்று (ஜூலை 18) காலை 8 மணி நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சோலையாறு அணையின் நீர்மட்டம் 150.82 அடியாகவும், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 31.30 அடியாகவும், ஆழியார் அணையின் நீர்மட்டம் 101.10 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 28.34 அடியாகவும் உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News July 18, 2024

கோவை: தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

image

சூலூர் முத்துக்கவுண்டன்புதூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த தினேஷ்குமார், மனோஜ், பாண்டீஸ்வரன் மற்றும் ஆண்டிபட்டியை சேர்ந்த வீரமணி ஆகிய 4 பேர் கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று வீரமணி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

News July 18, 2024

கோவையில் மிக கனமழை – பள்ளிகளுக்கு விடுமுறை

image

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் கோவை மாவட்டம் முழுவதும் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து, வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டுள்ளது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில, மிக கனமழை அறிவிப்பு எதிரொலியால் வேறு சில தாலுகாக்களுக்கும் விடுறை அளிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

கோவையில் நாளை காலை வரை மிக கனமழை

image

கோவை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் நாளை(ஜூலை 18) காலை 8.30 மணி வரை கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் சில பகுதிகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் வெளியில் சென்று வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News July 17, 2024

காரீப் பருவத்தில் பிரதமரின் பயிர்காப்பீட்டுத் திட்டம்

image

கோவை மாவட்டத்தில் காரீப் பருவத்தில் பிரதமரின் பயிர்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. காரீப் பருவத்தில் பயிர்காப்பீடு செய்ய நெல்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.764, உளுந்து மற்றும் பச்சை பயறு பயிர்களுக்கு ரூ.308 வழங்கபடுகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News July 17, 2024

வால்பாறையில் நாளை விடுமுறை அறிவிப்பு

image

கனமழையால் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு நாளை(ஜூலை 18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளர். மேலும் இரவு 10 மணி வரை கோவை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 17, 2024

தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

image

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழ் வளா்ச்சிக்காக பணியாற்றி வரும் ஆா்வலா்களை கண்டறிந்து பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசின் தமிழ் வளா்ச்சி துறை சாா்பில் ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒரு தமிழ் ஆா்வலரை தோ்வு செய்து தமிழ்ச்செம்மல் விருது வழங்கி வருகிறது. விவரங்களுக்கு 0422 – 2300718 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அதில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

News July 17, 2024

நாளை முதல் கூட்டுறவு வங்கியில் லோன் மேளா

image

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கல்வி கடன், வீட்டு உபயோக பொருட்கள் கடன், மறு அடமான கடன், 2, 4 சக்கர வாகன கடன், வீட்டு கடன், சிறு, குறு, மகளிர் தொழில்முனைவோர் கடன் ஆகியவை நாளை (ஜூலை 18) முதல் வரும் 30ஆம் தேதி வரை லோன் மேளா நடைபெற்ற உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!