India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனமழை எதிரொலியாக கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், ,பாதுகாப்பு நலன் கருதி வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “பாரத பாரம்பரிய நெல் & உணவுத் திருவிழா” எனும் பிரமாண்ட நிகழ்ச்சி வேலூரில் நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 1000 பேர் கலந்துகொண்டதாக கோவை ஈசா யோகா மையத்தினர் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்த உள்ளதாக கூறியுள்ளனர்.
கோவை, மதுக்கரை நகராட்சி பகுதியில் இருநூறு வருடங்களுக்கு மேல் பழமையான அரச மரங்களை வெட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மக்கள் பசுமை இயக்கம் சார்பாக அதன் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 50 முதல் 200 வருடங்களுக்கு மேல் பழமையான அரச மரங்களை ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் வெட்டி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பகுதியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சையில் உள்ளனர். மேலும் இரு தினங்களில் யானை தாக்கி 8 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்களுடன் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் எஸ்.பி.வேலுமணி
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார்.
பொள்ளாச்சி எம்எல்ஏ வி.ஜெயராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் பாஜக நிர்வாகி, அதிமுக நிர்வாகி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அதனால் தமிழகம் கொலை மாநிலமாக மாறி உள்ளது எனக் குற்றஞ்சாட்டினார்.
பொள்ளாச்சி எம்எல்ஏ வி.ஜெயராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் பாஜக நிர்வாகி, அதிமுக நிர்வாகி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அதனால் தமிழகம் கொலை மாநிலமாக மாறி உள்ளது எனக் குற்றஞ்சாட்டினார்.
மேட்டுப்பாளையத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர்கள் கூடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீலகிரி எம்பி ஆ.ராசாவிடம் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. அதனடிப்படையில் அவர் அளித்த கடிதத்தை இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் சென்னையில் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலி வழங்கினார்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கும் எனவும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொள்ளாச்சியில் நேற்று (ஜூலை 28) டேங்கர் லாரி மோதி இருவர் உயிரிழந்தனர். சுந்தேரகவுண்டனூரை சேர்ந்தவர் கவிபிரகாஷ் (20), ஜெயபிரகாஷ் (24). இவர்கள் நேற்று மாலை பணி முடித்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். மின்நகர் அருகே பின்னால் சென்ற டேங்கர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்து குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் நேற்று மைதானத்தில் நாக் அவுட் முறையில் நடைபெற்றன. மாணவர்கள் பிரிவில் வாலிபால் போட்டியில் என்ஜிஎன்ஜி பள்ளி முதலிடமும், மாணவியர் பிரிவில் கோ-கோ போட்டியில் கிணத்துக்கடவு விவேக் வித்யாலயா பள்ளி முதலிடமும் பிடித்தன. சர்வதேச வாலிபால் வீரர் மதுசூதனன் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.
Sorry, no posts matched your criteria.