Coimbatore

News August 1, 2024

ஆட்சியர் தொடங்கி வைத்த விழிப்புணர்வு குறும்படம்

image

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலக எல்.இ.டி வாகனத்தில் ஒளி பரப்பப்படுவதை இன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி பார்வையிட்டு அதனை தொடங்கி வைத்தார்.

News August 1, 2024

கோவை டெல்டா மீட்பு படையினர் வயநாடு விரைவு

image

கோவையை தலைமையிடமாகக் கொண்டு, 2015ல் ‘டெல்டா ஸ்குவாடு’ மீட்புப்படை துவக்கப்பட்டது.
இந்தப் படையில்
லெப்டினன்ட் ஈசன் தலைமையில் 25 இளம் ராணுவ வீரர்கள் உள்ளனர்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடர்
மீட்புப்பணியில் ஈடுபட இந்த மீட்புப்படையினர் நேற்று (ஆகஸ்ட் 1) காலையில் கேரளம் புறப்பட்டுச் சென்றனர். மீட்புப்பணிக்குத் தேவையான பல்வேறு மீட்பு சாதனங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

News August 1, 2024

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

image

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பகுதிகளில், மழைப்பொழிவு அதிகம் உள்ளதால் நொய்யலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டு, புட்டுவிக்கி அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து சென்றது. அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்பதால், நொய்யலில் நீர்வரத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

News August 1, 2024

கோவையில் இதுவரை 45 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் ‌இந்த வருடத்தில் இதுவரை 45 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News August 1, 2024

கோவையிலிருந்து சிறப்பு பேருந்துகள்

image

ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பர். வரும் 3ஆம் தேதி கோவையிலிருந்து ராமேஸ்வரத்திற்கும், ஆக.4ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து கோவைக்கும் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ˆwww.tnstc.in மற்றும் TNSTC அதிகாரப்பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

News August 1, 2024

வேளாண் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு

image

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நேற்று கூறுகையில், இளமறிவியல் மாணவர் சேர்க்கை 2024-2025 பொதுப்பிரிவினருக்கான ஐந்தாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு இந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. 5ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நாளை (ஆகஸ்ட் 2) நடைபெறும் என்று தெரிவித்தனர்.

News August 1, 2024

மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு

image

கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று(1.8.24) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் நடைபெறவுள்ளது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலக எல்.இ.டி வாகனத்தில் ஒளி பரப்பப்படுவதை கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைக்க உள்ளார்.

News July 31, 2024

ரீல்ஸ் செய்பவரா நீங்கள்.. ஒரு வாய்ப்பு

image

கோவை மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “ரீல்ஸ்” எனும் குறு வீடியோ போட்டி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்பவர்கள் சைபர் குற்றம், போதைப்பொருள் ஒழிப்பு, சாலை போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகிய தலைப்புகளில் 45 விநாடிகள் எடுத்த பதிவிடலாம் என்று ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

News July 31, 2024

மத்திய அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

image

மத்திய அரசை கண்டித்து நாளை காலை 10.30 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இடதுசாரி கட்சிகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் இம்மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

News July 31, 2024

நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம்: கலெக்டர் 

image

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான வால்பாறை, ஆனைமலை பேரூர் மற்றும் மதுக்கரை ஆகிய வட்டங்களை சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளான சின்னக்கல்லாறு, ஆழியாறு சோலையாறு, கூலாங்கல்லாறு, அப்பர் நீரார், கீழ் நீரார், காடம்பாறை ஆகிய சுற்றுலா தளங்களில் தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது. எனவே, இப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!