India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனடா புதிய பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் கோவையை பூர்வீகமாக கொண்ட பெண் அனிதா ஆனந்த் இடம் பெற்றுள்ளார். இவர் கனடாவின் அறிவியல் மற்றும் தொழில்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அனிதாவின் தந்தைவழி தாத்தா கோவை வெள்ளலூர் அன்னசாமி சுந்தரம் ஆவார். இவர் மகாத்மா காந்தியுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். கோவைக்கு பெருமை சேர்த்த அனிதா-க்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே நகரின் பல பகுதிகளில், கடந்த 2 தினங்களாக, பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் சில இடங்களில், இன்றிரவு 7 மணி வரை, மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
கோவை மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி நேற்று வெளிட்ட செய்திக்குறிப்பில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தமிழக சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா பயணச்சந்தை நிகழ்ச்சி மார்ச்.21 முதல் 23ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. கோவை மாவட்ட சுற்றுலா தொடர்புடைய தங்கும் விடுதிகள், முகவா்கள், ஏற்பாட்டாளா்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனம் சார்ந்த தகவல் அரங்குகளை அமைத்து பயன்பெற கேட்டுள்ளார்.
கோவை மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை (மார்ச்.18) நடைபெற இருந்த மாநகராட்சி மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் சார்பில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாஜக சார்பில் இன்று(மார்ச்.17) டாஸ்மாக் ஊழலை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இதில் கலந்து கொள்ள வந்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவி, கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனை, ஆர்ப்பாட்டம் செல்லும் வழியிலே போலீசார் கைது செய்தனர்.
கோவையில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 1,30,956 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.
கோவை மாவட்டத்தில் இன்று (16.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை அன்னூரை அடுத்த கருவலூரில், மாரியம்மன் வீற்றிருக்கிறாள். பண்ணாரி அம்மனுக்கு அடுத்தபடியாக, கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற தெய்வமாக கருவலூர் மாரியம்மன் உள்ளார். சக்திவாய்ந்த இந்த அம்மனை வணங்கினால், அம்மை, கண் நோய்கள் குணமாகுமாம். இக்கோயில் குளத்தில் வரும் நீர், கண் நோய்களை குணப்படுத்துமாம். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் சரியான பின்பு, இங்கு வந்து அம்மனை வணங்கி செல்கின்றனர்.
கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், வடை, உள்ளிட்ட திண்பண்டங்களை வாங்கி உண்ணும் போது, அதில் உள்ள எண்ணெயை காட்டிலும், தாளில் உள்ள மையால் பாதிப்பு அதிகம். விற்பனையாளர்கள் பிளேட், வாழை, தேக்கு இலைகளை பயன்படுத்தவும், பார்சல் கட்ட தாளின் மேல் இலை வைத்து கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவும், தாளும் நேரடி தொடர்பில் இருக்க கூடாது என்றார்.
கோவை வானிலை துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் மார்ச் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை, கோவையின் ஒரு சில பகுதிகளில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இந்த நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 19, 20, 21 ஆகிய தேதிகளில், வெப்பம் அதிகபட்சம் 35 டிகிரி வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.