India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாப்பம்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து மாணவர்களை ஏற்றி சென்று கொண்டு இருந்த போது இன்று கோழி தீவனம் ஏற்றி வந்த கனரக லாரியில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 4 மாணவிகள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அருகில் இருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோவையில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி வரும் செப் (ம) அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என 5 பிரிவுகளில் விளையாட்டு நடத்தப்படவுள்ளது; இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வென்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், 2வது பரிசு ரூ.75,000, 3 வது பரிசு ரூ.50,000. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிராந்திகுமார்பாடி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்திற்கு இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அங்கு பல இடங்களில் கனமழை பெய்யும் எனவும், போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் தெரிகிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மக்களே ஷேர் பண்ணுங்க!
வணிக வளாகங்கள் மற்றும் வணிகர்களின் துயரை தீர்க்க இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என வணிகர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. பொள்ளாச்சியில் நகராட்சி கட்டிட விதிமீறல்கள் எனக் கூறி மகாலிங்கபுரத்தில் உள்ள வணிக வளாகங்கள் பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையை கண்டித்து இன்று (13.8.24) கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று கூறியதாவது. நாளை(13.8.24) கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோவை மாநகராட்சியின் மேயர் ரங்கநாயகி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் நேரடியாக தங்களது மனுக்களை வழங்கி தீர்வு கண்டு பயன்பெறலாம் என அறிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து இன்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மும்பை செல்லுவதற்காக கோவை வந்தவர். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகின்றது என்று தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான தலை சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், சிறந்த பல்கலைகழகத்திற்கு பாரதியார் பல்கலைக்கழகம் 8ஆவது இடத்தை பெற்றதுள்ளது. அதே போல் கல்லூரியில் கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி 7ஆவது இடம் பிடித்துள்ளது. சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் கோவை CMC 3ஆவது இடத்தில் உள்ளது.
கோவை மாவட்ட நிர்வாகத்தால் வஉசி மைதானத்தில் வரும் ஆக.15ஆம் தேதி சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி ஒத்திகை நடைபெற்று வருகிறது. மேலும், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி ஒத்திகையும் அந்தந்த பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சுதந்திர தினத்தை ஒட்டி கோவை மாநகரில் 2000 போலீசாரும், புறநகரில் 1500 போலீசாரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கோவை பீளமேடு காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ-யாக பணிபுரிந்து வரும் ரவி, நேற்று ஹோம் கார்ட் பிரபுவுடன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கார் மோதியதில் பிரபு பலியானார். எஸ்எஸ்ஐ ரவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிந்த கோவை வடக்கு போக்குவரத்து போலீசார் இன்று விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கே.கே.புதூரை சேர்ந்த அஜய் ராகுல் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை பீளமேடு காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ – யாக பணிபுரிந்து வருபவர் ரவி. இவர் ஊர்க்காவல் படை வீரர் பிரபு என்பவருடன் டூவீலரில் ரோந்து பணி மேற்கொண்டு இருந்தார். அப்போது, கொடிசியா அருகே அதிவேகமாக வந்த கார் மோதியதில் பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ரவி கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோவை கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.