Coimbatore

News August 15, 2024

சிறந்த மாநகராட்சியாக கோவை தேர்வு

image

தமிழகத்தில் சிறந்த மாநகராட்சிக்கான விருது, கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் சிறந்த மாநகராட்சி அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், சிறந்த மாநகராட்சியாக கோவை தேர்வு செய்யப்பட்டது. இன்று சென்னையில் நடந்த சுதந்திர தினவிழாவில் முதல்வர் ஸ்டாலின் இவ்விருதை வழங்கினார். கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

News August 15, 2024

கோவையில் 2500 போலீசார் பாதுகாப்பு

image

நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை வஉசி மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தேசிய கொடியேற்றி காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறாா். தியாகிகளை கெளரவிப்பதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளாா். இதனையொட்டி மாநகரில் 1700, புறநகரில் 800 என மொத்தமாக 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News August 15, 2024

கூடுதல் பேருந்துகள் இயக்கம்

image

தொடர் விடுமுறையை ஒட்டி மக்களில் பலர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் ஈரோடு, சேலம், கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கோவை கிளை சார்பில் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக 55 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் வரும் ஆக.18ஆம் தேதி வரை இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

News August 15, 2024

காவல்துறை செயலிழந்து விட்டதா: வானதி சீனிவாசன் கேள்வி

image

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று கூறியதாவது.
தேசியக்கொடி பேரணி நடத்துவதால் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றால் காவல்துறை எதற்கு? தேசியக்கொடி பேரணி நடத்தினாலே சட்டம் – ஒழுங்கு கெட்டுவிடும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு மோசமாக இருக்கிறதா? காவல்துறை செயலிழந்து விட்டதா? என அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

News August 15, 2024

கோவையில் பிரபல நடிகர் சாமி தரிசனம்

image

கோவை, மருதமலை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ வள்ளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு நேற்று வருகை தந்த நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சுவாமி தரிசனம் செய்தார். நடிகரை கண்ட பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் திருக்கோவில் நடைபெற்ற சிறப்பு அலங்கார அபிஷேக பூஜையிலும் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டார்.

News August 15, 2024

ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

கோவை ரயில்நிலைய அதிகாரிகள் இன்று கூறியதாவது. அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, திருவணந்தபுரம், கொச்சுவேலியில் இருந்து பீகாரில் உள்ள பாட்னா வரை ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக பாட்னா செல்லும் எனவும்
வரும் 18ம் தேதி ஞாயிறு 7மணிக்கு புறப்பட்டு 21ம்தேதி மாலை 5.45 மணிக்கு பாட்னாவை சென்றடையும். 

News August 15, 2024

விமான நிலைய விரிவாக்கம் குறித்து ஆலோசனை கூட்டம்

image

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், விமான நிலைய இயக்குனர் செந்தில் வலவன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News August 14, 2024

கிராம சபைக் கூட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா? (1/6)

image

கோவை மாவட்டத்தில் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகலை பெறுவது எப்படி? (2/6)

image

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

error: Content is protected !!