India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனரா வங்கியின் கோவை மண்டல அலுவலகத்தின் சாா்பில் சிறந்த பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவிகள் 126 பேருக்கு வித்யா ஜோதி திட்டத்தின்கீழ் ரூ.5.04 லட்சம் உதவி தொகை நேற்று வழங்கப்பட்டது. இதனை கோவை மாவட்ட தாட்கோ மேலாளா் மகேஸ்வரி வழங்கினார். அப்போது, மண்டல தலைவா் ரதீஷ் சந்திர ஜா, கோட்ட மேலாளா்கள் நஞ்சுண்டா, ஸ்ரீதா் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
கோவை மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார். 2019இல் இத்திட்டத்திற்கு அப்போதைய முதல்வர் இபிஎஸ் ரூ.1,652 கோடி ஒதுக்கி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ஆட்சி மாறிய நிலையில் நாளை தொடங்கப்பட உள்ள நிலையில் இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேசிய விடுமுறை தினமான நேற்று (ஆக.15) கோவை மாவட்டத்தில் கடைகள், தொழில் நிறுவனங்கள் என 230 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 92 கடைகள், நிறுவனங்கள், 99 உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 191 உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க!
மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சிறப்பு வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆக.1 ஆம் தேதி அடர்லி அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் பாறாங்கற்கள், மரங்கள் விழுந்து தண்டவாளம் சேதமடைந்ததால் அன்று முதல் ஆக.15 வரை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் வரும் ஆக.22 ஆம் தேதி வரை இச்சேவையை ரத்து செய்து ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சிறந்த பேரூராட்சிக்கான விருது, கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பேரூராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், சிறந்த மாநகராட்சியாக கோவை தேர்வு செய்யப்பட்டது. அதே போல், சிறந்த பேரூராட்சியாக சூலூர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி விஜயா இன்று கூறியதாவது..
கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை, சூலூர், மதுக்கரை, அன்னூர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாக விசாரணை செய்து உடனடி தீர்வு கானும் வகையில் வரும் 14.09.2024 அன்று மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நீண்ட நாட்களாக நிறைவு பெறாமல் உள்ள வழக்குகளை இங்கு முறையிட்டு தீர்வு கானலாம் என்று தெரிவி்த்துள்ளார்.
78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, புரானி காலனியில் மஸ்ஜித் உல் குத்பி புரானி-தாவூதி போரா ஜமாஅத் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது. இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி,
அனைவருக்கும் 78வது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
கோவை வஉசி மைதானத்தில் கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் 83 பேருக்கு, அரசு அலுவலர்கள் 140 பேருக்கு மொழி போராட்ட தியாகிகள் என பலருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், மதுரையில் இருந்து வரும் ஆக.18ஆம் தேதி இரவு புறப்படும் மதுரை – முஷாபா்பூா் ஒருவழி சிறப்பு ரயில் ஆக.21ஆம் தேதியன்று முஷாபா்பூா் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலானது திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி, கோவை, பெரம்பூர், கூடூர், நெல்லூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.