India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <
கோவையில் கார்ட்டூன் தொடர்களுக்கு அடிமையாகி, அதில் வரும் கேரக்டர்கள் போல் தங்களை மாற்றி நடந்து கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், 2வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கார்டூன் பார்ப்பதை அனுமதிக்க கூடாது. பாடம் சார்ந்ததை மட்டும் சிறிது நேரம் பார்க்க அனுமதிக்கலாம். இவ்விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்றனர். (SHARE)
ஆனைமலை அருகே கவியருவி, சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் அங்கு செல்லவும், தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையில் கடந்த ஒரு மாதமாக கவியருவிக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால், தொடர்ந்து கவி அருவி மூடப்பட்டிருந்தது. தற்பொழுது கவியருவிக்கு நீர்வரத்து குறைந்ததால், இன்று முதல் கவியருவி திறக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் இன்று (05.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
இபிஎஸ் பிரச்சார பயண திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 7 காலை 9 மணிக்கு வனபத்ரகாளியம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் விவசாயிகளுடன் சந்திப்பு நடைபெற உள்ளது. மாலை 4.35 மணி அளவில் மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் காந்தி சிலையில் இருந்து பேருந்து நிலையம் வரை ரோடு ஷோ. பின் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
கோவை பீளமேட்டில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Trainee technician பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். இதற்கு முன் அனுபவம் தேவையில்லை. டிப்ளமோ முடித்தவர்கள் <
சூலூரில் வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இத்தலத்தில் ஈசன் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கரிகாலச் சோழன் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்குதற் பொருட்டு, கொங்கு நாட்டில் பல சிவாலயங்களை எழுப்பி திருப்பணி செய்தான். அவற்றுள் இக்கோயிலும் ஒன்று என்கிறது சோழனின் பூர்வ பட்டயம். இங்கு வந்து பூஜை செய்தால் தீராத பிணிகள் கூட தீரும் என்பது நம்பிக்கை. SHARE IT!
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுசெயலாளரும், எம்எல்ஏவுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் நேற்று இருகூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், திருப்புவனம் காவலாளி அஜித்குமார் மரணம் காவல்துறையின் மனிதாபிமானமற்ற செயல். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். ஒரு சில காவலர்களின் தவறுகளால் மொத்த காவல்துறை, அரசு, முதலமைச்சருக்கு களங்கம் ஏற்படுகிறது என்றார்.
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க <
உள்ளூர் வங்கி அதிகாரியாக பணியில் சேர ஏதேனும் டிகிரி, சிஏ முடித்தவர்கள் தகுதியுள்ளவர்கள். விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாநில மொழியை பேச, எழுத கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க https://www.bankofbaroda.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் (ம) முன்னாள் ராணுவத்தினர் ரூ.175 கட்டணம் ஆகும்.
Sorry, no posts matched your criteria.