India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) கோயம்புத்தூர் – பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 270-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் , 8 மற்றும் 10-ம் வகுப்பு,ஐடிஐ, இன்ஜினியரிங்,டிகிரி, செவிலியர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார். SHAREIT
கோவை பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் Advanced CNC, Aeronautical Structure, Multimedia போன்ற பிரிவுகளில் நேரடி சேர்க்கை 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டது. 8ம் மற்றும் 10ம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டுமான தொழிலாளர் நலவாரிய அட்டை அவசியம். இலவச சைக்கிள், பாடநூல்கள், உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு என்ற 88254 34331, 9566531310 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கோவை மாவட்டத்தில் இன்று (21.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் உள்ளிட்ட பட்டயப் படிப்புகளுக்கான துணை இணையவழி விண்ணப்பங்கள் இன்று (21.08.2025) முதல் 29.08.2025 வரை பெறப்படுகின்றன. மேல்நிலை தேர்ச்சி பெற்றவர்கள் http://tnau.ucanapply.com என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே தரவரிசைப்பட்டியலில் இடம் பெறுவோர் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் 2300 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளில் பிரதிஷ்டை செய்ய போலீசார் அனுமதி அளித்துள்ளார்கள். நாடு முழுவதும் வருகிற 27ஆம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புறநகரில் உள்ள 1600க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மண்டலப் புள்ளியியல் இணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள நிரந்த முழு நேர காவலர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 8 வது தேர்ச்சி (ம) தமிழ் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். <
கோவை செல்வபுரத்தை சேர்ந்த ராம்செட், ஆசிரியர் என்றும் முட்டை வியாபாரம் செய்வதாகவும் கூறி பலரிடம் 20–30 லட்சம் வீதம் வசூலித்து, ஆரம்பத்தில் சில மாதங்கள் பொருட்களை வழங்கினார். பின்னர் வியாபாரம் நிறுத்தி லாபம் தராமல் மறைந்தார். ஏற்கனவே மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்டோர் இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் புகழ்பெற்ற விநாயகர் திருத்தலங்களில் ஈச்சனாரி விநாயகர் கோவிலும் ஒன்றாகும். இந்த விநாயகர் கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்யும் நட்சத்திர அலங்கார பூஜை மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இத்தல விநாயகரை மனமுருகி வேண்டினால் எடுத்த காரியம் அனைத்திலும் தடங்கல் இல்லாமல் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
கோவை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 92 டாஸ்மாக் பார்களுக்கான ஏல விண்ணப்பங்கள் திறக்கப்பட்டன. இந்த நிகழ்வு, மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளர் கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்றது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில், மாவட்ட அளவில் உள்ள 92 பார்களில், 36 பார்களுக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 56 பார்களுக்கு யாரும் ஏலம் எடுக்க விண்ணப்பிக்கவில்லை.
Sorry, no posts matched your criteria.