India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் இன்று (20.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா நேற்று கூறுகையில், கோவை மாவட்டத்தில் கடந்த 2024ல் 37 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 97 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்குட்பட்ட கிராம வாரியாக குழு ஏற்படுத்தி, குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் 100 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை <
கோவை சின்னவேடம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில், உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த துரைராஜிடம், கடந்த 2009 ஆம் ஆண்டு, மணியக்காரன்பாளையத்தை சேர்ந்த தனபாக்கியம், மின் இணைப்பை மாற்றி வழங்க கோரி, ரூ.300 லஞ்சம் கொடுத்தார். அப்போது போலீசார் அவரை கைது செய்தனர். இவ்வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
கோவையில் பிரபல பாம்பு பிடி வீரராக இருப்பவர் சந்தோஷ். இவர் சமீபத்தில் பாம்பு பிடிக்க சென்றபோது, எதிர்பாராத விதமாக, சந்தோஷை நாகப்பாம்பு கடித்தது. பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாம்பு பிடி வீரர் சந்தோஷ் பரிதாபமாக நேற்றிரவு உயிரிழந்தார். தமிழக அரசு இவரது குடும்பத்திற்கு உதவ வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 22 ஆம் தேதி, காலை 8 மணியளவில், அவினாசி ரோடு, நவஇந்தியாவில் அமைந்துள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் அனைத்து தொழிலாளர் துணை ஆய்வர்கள், முத்திரை ஆய்வர்கள் இணைந்து, கடந்த மாதம் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி அமைத்து கொடுக்காத, 8 நிறுவனங்கள் உட்பட மொத்தமாக 197 நிறுவனங்கள் மீது, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச் 19) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்திய ராணுவத்தில் அக்னிவீரராக சேர இந்திய ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. ஆட்சேர்ப்புக்கு கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள இளைஞர்கள் மார்ச்.12 முதல் ஏப்ரல்.10ம் தேதி வரை www.joinindianarmy.nic.in என்ற இணைதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மதுக்கரை நாச்சிபாளையம் பகுதியில் இன்று காலை பெண்ணின் உடல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளது. இதுகுறித்து விரைந்து சென்ற மதுக்கரை போலீசார் சடலத்தை மீட்டு கோவை ஜிஎச் அனுப்பி வைத்தனர். மேலும், விசாரித்ததில் இறந்தவர் வழுக்குப்பாறை அரசு பள்ளியில் 10ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரியும் பத்மா என்பது தெரிந்தது. தொடர்ந்து அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.