India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அன்னூரில் நடிகர் செந்தில் பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு (ஏப்ரல். 3) வாக்கு சேகரித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து திரைப்பட நடிகர் செந்தில் அன்னூர் ஒன்றியத்துக்குட்பட்ட கணேசபுரம், கணுவக்கரை பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இதில் வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, செயலாளர் ஜெயபால், ஒன்றிய தலைவர்கள் திருமூர்த்தி ரத்தினசாமி கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது.இந்த நிலையில் இன்று (ஏப்.03) தமிழகத்தின் 13 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியுள்ளது . இதில் அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் 101 டிகிரி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தொடர்பான புகார்கள் இருந்தால் அதனைத் தெரிவிக்க மாநில தேர்தல் செலவின பார்வையாளரின் தொடர்பு எண் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் இன்று (ஏப்.03) வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத் தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின் மாநில தேர்தல் செலவின பார்வையாளரை அலைபேசி எண் 9345298218 என்ற எண்ணின் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்ப்பட்டது.
கோயமுத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள்/வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் (05.04.2024, 10.04.2024, 16.04.2024) ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க கோவை தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
மருதமலை கோயிலில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் இன்று வெளியாகி உள்ளது. அதில், டிக்கெட் விற்பனை எழுத்தாளர் (1 பணியிடம்), அலுவலக உதவியாளர் (2), ஓட்டுநர் (5), பிளம்பர் கம் பம்ப் ஆபரேட்டர் (1), காவலர் (4), திருவலகு (2), விடுதி காப்பாளர் (1), பல வேலை (1), மினி பஸ் கிளீனர் (1) என 19 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
தென்னக ரயில்வே சேலம் கோட்டம் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், நெல்லையில் இருந்து ஞாயிறன்று இரவு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை திங்களன்று மேட்டுப்பாளையம் சென்றடையும். அதேபோல் திங்களன்று இரவு புறப்பட்டு மறுநாள் செவ்வாயன்று நெல்லையை சென்றடையும். இந்த சிறப்பு வாராந்திர ரயில் வரும் மே.27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஏப்ரல் 12ம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், கோவை திமுக வேட்பாளரை ஆதரித்து அவர் ஏப்ரல் 12ம் தேதி பிரச்சாரம் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை பாஜக மக்களவை வேட்பாளர் அண்ணாமலை தெப்பக்குளம் மைதானத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், மீனவ மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு பின்பு உண்மை தெரிந்துள்ளது. தந்தை பெயர், தாத்தா பெயர் வைத்துக் கொண்டு கொச்சையாக பேசும் உதயநிதிக்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள். அவரை போதை உதயநிதி என நாளை முதல் கூப்பிடுகிறோம் என்றார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை தொகுதியில் நேற்று பறக்கும் படையினரின் ஆய்வில் 13 பேரிடம் இருந்து சுமார் 1,12,17,650 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் கோவை தெற்கு தொகுதியில் ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 11 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அருண்காந்த் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரிடம் நேற்று அளித்த மனுவில், அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் காவல்துறையினரின் அனுமதி பெற்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த பிரச்சார செய்திகளை வெளியிடுவதற்கு தொலைக்காட்சிகள் கட்டணம் பெறுகின்றன. எனவே இந்த செய்திகளை விளம்பரமாக கருதி செலவினத்தில் சேர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.