India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் அடுத்த 2 மணி நேரத்துக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
சரவணம்பட்டியில் 100% வாக்கு பதிவை வலியுறுத்தி (ஏப்ரல்.7) ஆட்சியர் தலைமையில் பேரணி நடைபெற உள்ளது. கௌசிகா நீர்க்கரங்கள் சார்பில் 100% வாக்கு பதிவை வலியுறுத்தி (ஏப்ரல்.7) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் சரவணம்பட்டியில் இருந்து கணபதி வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது.
தென்னக இரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக ஸ்ரீ எம்.செந்தமிழ் செல்வன் இன்று (ஏப்ரல்.04) பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று கோவை ரயில் நிலையம் பகுதியில் இரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இனி பொதுமக்கள் ரயில்வே இடையே உள்ள அனைத்து தேவைகளையும் இவர் பூர்த்தி செய்வார் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுக்கு இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 பிரிவு சட்டத்தின் கீழ் நடைபெறும் 2024-25 கல்வியாண்டில் 25 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் தகுதியுள்ள குழந்தைகளை சேர்க்க tnschools.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார.
கோவையில் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூட்டாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக கோவையும் பலத்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா கூட்டணி திமுக வேட்பாளரை ஆதரித்து இருவரும் வாக்கு சேகரிக்க கோவை வருகை தர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் வேட்பாளர்கள் தனியார் கட்டடங்களிலோ அல்லது வாகனங்களிலோ ஸ்டிக்கர் ஒட்டும்போது , அதன் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று, ஒப்புதல் கடிதம் பெற வேண்டும். அதை 3 நாட்களுக்குள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். மீறினால் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கருதி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் கிராந்தி இன்று தெரிவித்துள்ளார்.
கோவை சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெற்ற சம்பவத்தில், கைது செய்யபட்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் இருவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்று (ஏப்ரல்.04) சந்திக்க பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூருக்கு இப்ராஹிம் கோவை மத்திய சிறைச்சாலைக்கு வந்தார். மேலும் சிறையில் அவர்களை சந்தித்து இச்சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலில் விதிமீறல் தொடர்பாக மக்கள் புகார் அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல ஏற்பாடுகளை செய்துள்ளது.அதன்படி கோவை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், சி விஜில் செயலி மூலமாகவும் புகாரினை தெரிவிக்க இயலும். அதன்படி இதுவரை 157 புகார்கள் வரப்பட்டுள்ளதாகவும்,அதற்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் விதிமீறல் தொடர்பாக மக்கள் புகார் அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல ஏற்பாடுகளை செய்துள்ளது.அதன்படி கோவை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், சி விஜில் செயலி மூலமாகவும் புகாரினை தெரிவிக்க இயலும். அதன்படி இதுவரை 157 புகார்கள் வரப்பட்டுள்ளதாகவும்,அதற்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.