India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகள் குறித்து வங்கியாளர்கள் மற்றும் புலனாய்வு பிரிவு, மத்திய மாநில கலால் பிரிவு, வருமானவரித்துறை உள்ளிட்ட அமலாக்கத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, வட்டாட்சியர் தணிகைவேல், வங்கியாளர்கள் இருந்தனர்.
கோவையில் கத்திரி வெயில் துவங்கியுள்ள நிலையில், கோவை விமான நிலையத்தில் உள்ள வானிலை மையத்தில் இன்று (ஏப்ரல்.05) வெப்பம் 39.8 C ஆக இருந்துள்ளது மேலும் வரும் திங்கள் வரை வானிலை கோவையில் 38 C முதல் 40 C வரை இருக்கும். ஏப்ரல் 9 தேதிக்கு பின்னர் வெப்பம் 36 C முதல் 37 C வரை இருக்கும். ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு பின்னர் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று வானிலை அதிகாரிகளின் கூறினார்.
கோவை தொகுதியில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களாக 18-19 வயது நிரம்பியவர்கள் 31ஆயிரத்தி 382 பேர் உள்ளனர். அதைபோல் 20-29 வயது உடையவர்களாக 3 லட்சத்து 18ஆயிரத்து 145 வாக்காளர்கள் உள்ளனர். இதனால் இளம் வாக்காளர்களின் ஓட்டுகள் வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் இந்த தேர்தல் அமைந்துள்ளது.
கோவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரியில் நடைபெற உள்ளது. அங்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆட்சியர் (ப) ஆசிக் அலி, துணை ஆணையர் சிவகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்த ராமச்சந்திரன்(29) என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திலீப் (19) மற்றும் கௌரிசங்கர் (21) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவர் மீதும் இன்று (ஏப்ரல்.05) கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அடையார் பகுதியை சேர்ந்த வரலட்சுமி, அவருடைய மகன் யுவராஜ், மகள் ஜனனி உள்ளிட்ட மூவரும் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு நேற்று போத்தனூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். பின், மூவரும் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். அப்போது, வெங்கிட்டாபுரம் அருகே வந்த போது மூவரும் அந்த வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் பறக்கும் படையினரின் சோதனையில் இதுவரை 257 பேரிடம் இருந்து ரூ.7,66,93,404 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பித்த 156 பேருக்கு ரூ.2,16,87,170 திருப்பி அளிக்கப்பட்டது. மீதமுள்ள தொகை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், 40 சதவீதத்திற்கும் மேல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு பதிவு செய்வதை தவிர்க்கும் விதமாக தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ள முதியோர், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்.5) துவங்குகிறது.
பொள்ளாச்சி தொகுதிக்கான தேர்தல் செலவினங்கள் தொடர்பான பணிகளை கண்காணிக்க சௌரப் குமார் ராய் என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 04 ) சௌரப் குமார் ராய் மாற்றப்பட்டு புதிய தேர்தல் செலவின பார்வையாளராக ஷிவ் பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அரசியல் கட்சியினரின் செலவு கணக்குகள் உள்ளிட்டவைகளை கண்காணிப்பர் என கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.