India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மருதமலை அடிவாரத்தில் மலையாள சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த படத்தில் நடித்து வரும் துணை நடிகர்கள் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கியிருந்தனர். அவர்களுடன் துணை நடிகர் கேரளா மலப்புரத்தை சேர்ந்த ஹரிதாசன் (39) என்பவரும் தங்கியிருந்தார். நேற்று அவர் அறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் இன்று (21.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக, திருவனந்தபுரம் வடக்கு – ஷாலிமார் இடையே, வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம் வடக்கு – ஷாலிமார் ரயில் 28.03.2025 மற்றும் 04.04.2025 ஆகிய தேதிகளில், 4.20 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, 13.40 மணிக்கு ஷாலிமாரை சென்றடையும் என ரயில்வே துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே நகரின் சில பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக, பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கோவை மாவட்டத்தில் சில இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் மகேஷ்குமார் நேற்று கூறியதாவது: கோவை மருதமலை கோவிலில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் கோவில் குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலைகள் அமைக்கும் பணிகள், வண்ணம் பூசும் பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது என்றார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மார்ச்.23ஆம் தேதி கோவை வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்தில் ரூ.10 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறாா். தொடா்ந்து வனக்கல்லூரியில் நடைபெற உள்ள அரசு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் ஒருவர் “கடந்த கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோவிலில் 1998 ஆம் ஆண்டுக்குப்பிறகு தைப்பூச மற்றும் சித்திரை தேரோட்ட நிகழ்வுகள் நடைபெறாமல் தடைபட்டது. திருவிழாக்களை வழக்கம் போல நடத்த உத்தரவிட வேண்டும் ” என மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் கோவிலின் திருவிழாக்களை வழக்கம்போல நடத்த வேண்டும் என அறநிலையத்துறைக்கு நேற்று உத்தரவிட்டது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை தொழில் ரீசியாகவும், கல்வி, வேலை வாய்ப்புகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் கோவை, சரவணம்பட்டி, காலாப்பட்டி, மலுமிச்சம்பட்டி, சூலூர், கோவைப்புதூர் பகுதியில் தொழில் பூங்கா, ஐடி பூங்காக்கள் வர இருப்பதற்கான மாஸ்டர் பிளானை அரசு தயார் செய்து வருகிறது. இதனால், அடுத்த 5-10 ஆண்டுகளில் இப்பகுதியில் ரியல் எஸ்டேட் மதிப்பு உச்சத்தை அடையவுள்ளது. (Share பண்ணுங்க)
தமிழகத்தில் குழந்தை திருமணம் குறித்து அதிகாரிகள் பல்வேறு நடவக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து கோவை மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா கூறுகையில், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், ஆனைமலை பகுதியில் குழந்தை திருமணம் அதிகம் நடக்கிறது. இதை தடுக்கும் விதமாக கிராமம் வாரியாக குழு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், குழந்தை திருமணம் குறித்து தகவல் அளித்தார் ரூ.2,000 வெகுமதி வழங்கப்படும் என்றார்.
கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 18 வாரங்கள் கொண்ட இந்த பயிற்சி கோவை திருச்சி, சேலம், ஓசூர் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் வழங்கப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.