India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், 2 முதல் 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
நெல்லித்துறையை சேர்ந்த சுரேஷ்குமார், அரவிந்த் என்பவருடன் இணைந்து பாக்கு மட்டை மிஷின் வாங்கி அடித்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், அரவிந்த் தொழிலில் இருந்து விலக முடிவு எடுத்து மிசின் வாங்க கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதி கொண்டனர். இப்புகாரின் பேரில் சுரேஷ்குமார், உதயகுமார், ஐயப்பன் உட்பட 7 பேரை இன்று போலீசார் கைது செய்தனர்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல்.19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசு, தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகள் தங்களது பணியாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறையை வழங்கவேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்களுக்கு விடுமுறை தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால் அதை தொழிலாளர் நலத்துறை கட்டுப்பாடு அறைக்கு 94453-98752, 0422-2241136, 99426-64066 தொடர்பு கொள்ளலாம்.
இனம், மொழி, ஜாதி வெறியைத் தூண்டி அரசியல் நடத்தும் குடும்ப கட்சிகளின் தேர்தல் அறிக்கை போல காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. மருத்துவக் கல்வி, இட ஒதுக்கீடு முறையை சீர்குலைக்க முயற்சிக்கிறது காங்கிரஸ், எனவும் இன்று (ஏப்ரல்.06) கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்களிக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மற்றும் ஏப்ரல்.09ஆம் தேதி ஆகிய தேதிகளில் மேற்படி வாக்காளர்களின் இல்லத்திற்கே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த வசதியினை பயன்படுத்தி மாற்றுத் திறனாளிகள் அவர்களது இல்லங்களில் இருந்தே வாக்கு செலுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
கோவை தொட்டிபாளையத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த சமயத்தில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை அதே நேரத்தில் எவ்வித அனுமதி பெறாமல் அதிமுகவிற்கு தேர்தல் பரப்புரை செய்ய வழங்கப்பட்ட நேரம் மற்றும் பகுதியில் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் கரும்பத்தம்பட்டி காவல் நிலையத்தில் இன்று (ஏப்ரல்.06) புகார் அளித்தார்.
கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, கோவையில் 224 மற்றும் பொள்ளாச்சியில் 140 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் ஏதும் இல்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் கல்லார் ரயில்வே கேட் அருகே உள்ள புளியந்தோட்டத்தை சேர்ந்தவர் ராமன்(33). இவர் தனது உறவினரான பள்ளி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. மாணவி படிக்கும் பள்ளிக்கு வழக்கமான ஆய்வுக்காக சென்ற சுகாதார செவிலியரிடம் மாணவி அளித்த தகவலின் பேரில் உறவினரான ராமன் நேற்று மேட்டுப்பாளையம் போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, சுயேச்சை என 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே பொருத்த முடியும். அதன்படி கோவை மக்களவை தொகுதியில் 3 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. எனவே, திண்டுக்கல்லில் இருந்து நேற்று ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
வரும் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் நீலகிரி தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கோவை தொகுதியில் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் வரும் ஏப்.10ஆம் தேதி பாரத பிரதமர் மோடி காரமடை அருகே உள்ள தென்திருப்பதி நால்ரோடு டிகேவி மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.