India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (8.04.2024) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேங்காய் நாரினைக் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு விழிப்புணர்வு சின்னத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
வால்பாறையில் துணிக்கடை நடத்தி வருபவர் சுதீர். இவரது தங்கை மகன் ஷியாம். வால்பாறையில் உள்ள துணிக்கடை, உணவகங்களை நிர்வகித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் வால்பாறை அடுத்துள்ள வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் குளித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வால்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். சரவணம்பட்டி பகுதியில் அவர் பேசியதாவது, ‘கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் முன் சாலை வசதியை ஏற்படுத்தித் தாருங்கள், கிரிகெட் மைதானம் அமைக்க பிசிசிஐயிடம் நாங்கள் நிதி வாங்கித் தருகிறோம்’ என்றார்.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமை அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் பெண்களுக்கு அதிக இட ஒதுக்கீடு செய்துள்ளது திமுக என்று இருந்தது. அதற்கு வாரிசு அரசியலிலும் பெண்களை ஓரங்கட்டும் திமுகவுக்கு சமூக நீதி பற்றி பேச உரிமை இல்லை. மேலும் பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் நரேந்திர மோடி என்றார்.
தர்மபுரியை சேர்ந்த ராமச்சந்திரன், கிருஷ்ணகிரியை சேர்ந்த அருண்குமார். இருவரும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அறை எடுத்து தங்கி அங்குள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டை சுத்தம் செய்வது தொடர்பாக இருவருக்கும் நேற்று(ஏப். 6) வாக்குவாதம் ஏற்பட்டு அருண்குமார் கத்தியால் ராமச்சந்திரனை குத்தியுள்ளார். இப்புகாரின் பேரில் போலீசார் அருண்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
கோவை பெரிய கடை வீதியில் நகை கடை நடத்தி வரும் அர்ஜுன் கௌதமிடம் மஹா.,வை சேர்ந்த அங்கீத், துஷார் பவார், சங்கீத் பன்சால், பாண்டுரங்கன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வந்துள்ளனர். பாண்டுரங்கனை தவிர மற்ற மூவரும் ஒரே நேரத்தில் வேலையை விட்டு நின்றுள்ளனர். சந்தேகமடைந்த கௌதம் கடையின் இருப்பை சோதித்த போது 3 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது தெரிந்தது. இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்.19 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதை செயல்படுத்துகிறதா என உறுதி செய்வதற்காக கோவை தொழிலாளர் உதவி ஆணையர் காயத்ரி, துணை ஆய்வாளர் சுப்ரமணியம் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் வரும் ஏப்.19 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் கடந்த தேர்தலில் 50% க்கும் கீழ் வாக்குப்பதிவு குறைந்த 215 இடங்களில் வீடு, வீடாக விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றதாக ஆட்சியர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள https://affidavit.eci.gov.in/ என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
கோவை கரும்புக்கடை பூங்கா நகர் மஸ்ஜிதுல் பள்ளிவாசலில் பாரதமாதா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கௌரிசங்கர் தலைமையில் நேற்று மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காது கேளாத, வாய் பேச இயலாத, பார்வை மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மாவு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.