Coimbatore

News April 10, 2024

சின்னத்தை முடக்குவதால் கட்சியை அழித்துவிட முடியாது

image

கோவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலா மணியை ஆதரித்து நேற்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர் தமிழகத்தில் வட மாநிலத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தமிழக நலனுக்கு ஏற்றதல்ல. இதே நிலையில் நீடித்தால் நாடே எதிர்பார்க்காத ஒரு புரட்சி உருவாகும். சின்னத்தை முடக்கினாலும் நாம் தமிழர் கட்சியை எதுவும் செய்து விட முடியாது என பேசினார்.

News April 9, 2024

பிரதமரின் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்.

image

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அன்னூர்,கரியாம்பாளையம், காரமடை வழியாக மேட்டுப்பாளையம் செல்லலாம். நீலகிரியில் இருந்து வரும் வாகனங்கள் ஓடந்துறை ராமசாமி நகர், சிறுமுகை சென்று அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2024

திருப்பூர் வரை நீட்டிக்கும் திட்டம்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பல வாக்குறுதிகளை திமுக கோவைக்கு வழங்கி வந்துள்ளது. அதில், கோவையில் இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை வைத்து திமுக ஒரு புது தேர்தல் வாக்குறுதியை வழங்கி இருக்கிறது. அதன்படி, கோவை மெட்ரோ ரயில் சேவை விரைவில் செயல்படுத்தப்பட்டு அந்தத் திட்டம் திருப்பூர் வரை நீடிக்க வழி வேலை செய்யப்படும் என இன்று (ஏப்ரல்.09) கூறப்பட்டுள்ளது.

News April 9, 2024

கோவை: பாதுகாப்பு பணியில் 4000 போலீசார்

image

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அண்ணாமலை (கோவை), மத்திய இணையமைச்சர் எல்.முருகன் (நீலகிரி), வசந்தராஜன் (பொள்ளாச்சி), ஏ.பி.முருகானந்தம் (திருப்பூர்) ஆகியோரை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் நாளை (மார்ச்.10) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இதற்கு 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2024

தேர்தல் விதி முறைகள் மீறியதாக முதல்வர் மீது புகார்

image

கோவையில், கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறப்படும் வகையில் உள்ளது என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக நிர்வாகி இன்பதுரை இன்று புகாரளித்துள்ளார். அந்த புகாரில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் ராஜா, உதயநிதி மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் என்று கூறியுள்ளார்.

News April 9, 2024

கோவை: தங்க மோசடி செய்த தம்பதி

image

கோவை பெரியகடை வீதியை சேர்ந்தவர் மாயாண்டி (48). நகைப்பட்டறை உரிமையாளரான இவர் கோவை ராமமூர்த்தி ரோட்டை சேர்ந்த சிவக்குமார், கனகலட்சுமி தம்பதியிடம் 2022 ஆம் ஆண்டு நகை செய்து தர 1 கிலோ தங்கம் தந்தார். அவர்கள் 350g தந்து விட்டு மீதம் 650g தங்கத்தை தராமல் காலம் கடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று மாயாண்டி கடைவீதி போலீசில் அளித்த புகாரின் பேரில் தம்பதி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

News April 9, 2024

பிரதமர் வருகை: கோவையில் ரெட் ஜோன்

image

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றளவிற்கு இன்றும், நாளையும் இரு தினங்களுக்கு தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News April 9, 2024

இரண்டு வாக்குச்சாவடிகள் இடமாற்றம் – கோவை ஆட்சியர்

image

பொள்ளாச்சியில் இரு வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்றி வெளியிட்ட செய்தி குறிப்பில், பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட குறிச்சி பிருந்தாவன் வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பாகம் எண் 140, 141 வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணைய உத்தரவின்படி போத்தனூர் ரயில்வே சிபிஎஸ்இ பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

News April 9, 2024

பொள்ளாச்சி அருகே ரூ.32 கோடி பறிமுதல்?

image

பொள்ளாச்சி அருகே பிரபல கோழிப்பண்ணை அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அங்கு கணக்கில் வராத 32 கோடி ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆவணங்களையும் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. விடிய விடிய நடந்த சோதனையில் கோடி கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

News April 8, 2024

ட்ரோன்கள் பறக்க காவல்துறை தடை

image

கோவை: காரமடை தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் பிரதமர் மோடி வரும் 10ஆம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து எஸ்.பி பத்ரி நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில், தென்திருப்பதி நால்ரோட்டை சுற்றி 5 கி.மீ சுற்றளவிற்கு பிரதமர் வரும் வழித்தடத்தில் வரும் 9, 10ஆம் தேதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.