India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை செட்டிபாளையத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இருவரும் பிரசாரம் மேற்கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடியின் அரசு போக வேண்டிய நேரம் இது. மோடியின் அரசு என நான் சொன்னாலும், இது அதானியின் அரசு. அதானிக்காகவே , மோடி எல்லாம் செய்கிறார் என்றார்
கோவை ஆவாரம்பாளையத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரச்சாரம் செய்ததாக பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை மீது தேர்தல் அலுவலர் பீளமேடு காவல் நிலையத்தில் இன்று (ஏப்ரல்.12) புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் விறுவிறுப்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர், மத்திய இணையமைச்சர் எல்.முருகனை ஆதரித்து வரும் ஏப்.14 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ரோட் ஷோ நடத்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் (13.4.2024) கோவையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகிறார். அதன்படி கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து 10,000 பெண்களுடன் நிர்மலா சீதாராமன், மக்கள் தரிசன யாத்திரை மேற்கொள்கிறார் என இன்று (ஏப்ரல்.11) தகவல் வெளியாகியுள்ளது.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் ட்ரீம் மார்க்கர்ஸ் குளோபல் பி லிட் என்ற நிதி நிறுவனம் மக்களிடமிருந்து முதலீட்டை பெற்று இரட்டிப்பாக திருப்பி தருவதாக கூறி, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளது. இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளிக்கலாம் என கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் நேற்று செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், “ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட முன்பதிவு மையங்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவது போன்று இன்று (ஏப்.,11) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும். எனவே, முன்பதிவு செய்யும் பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவையில் எதிர்வரும் ஏப்ரல்.17ஆம் காலை 10.00 மணி முதல் ஏப்ரல்.19ஆம் தேதி இரவு 12 மணி வரை மற்றும் ஜூன்.04 வாக்கு எண்ணிக்கை நாளன்றும் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கோவை மற்றும் மதுரையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதில், மார்ச் மாதத்தின் பல நாட்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. இதே போல் மதுரையிலும், வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இன்று கோவையில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும், நாளை 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஏப்.10) கோவை ஆத்துப்பாலம் பள்ளி வாசலில் தொழுகை முடித்துவிட்டு வந்தவர்களிடம், பொள்ளாச்சி தொகுதியின் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கோவை: காரமடை தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் பிரதமர் மோடி இன்று (10.04.2024) கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் 5 கி.மீ சுற்றளவிற்கு தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.