India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை ரயில்வே துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கொச்சுவேலி-பெங்களூரு வாராந்தர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெங்களூர்-கொச்சுவேலி சிறப்பு ரயில் பெங்களூருவில் இருந்து, வரும் 2ஆம் தேதி முதல், நவ., 6ஆம் தேதி வரை, புதன்கிழமை தோறும் மதியம் 12:45 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் காலை 6:45 மணிக்கு, கொச்சுவேலியைச் சென்றடையும். புதன்கிழமைகளில் இரவு 8: 15 மணிக்கு போத்தனுாரையும் அடையும் என்றனர்.
தேங்காய் மற்றும் கொப்பரை விலை தொடர்ந்து உயர்ந்து காணப்படுவதால் இந்த வாரம் இளநீரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நாளை ( செப் 30) முதல் இளநீர் விலை கடந்த வார விலையில் இருந்து ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.41 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு டன் இளநீரின் பண்ணை விலை ரூ.16000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கோவை மாவட்ட நிர்வாகம், கோவை மாநகராட்சி இணைந்து வரும் அக்.1ஆம் தேதி சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடத்த உள்ளது. மசக்காளிபாளையம் ஹர்ஷா மஹாலில் நடைபெற உள்ள இம்முகாமில் கூட்டு பட்டா, தனிப்பட்டா, நில அளவை உள்ளிட்ட பல சேவைகள் உடனடியாக நிவர்த்தி செய்ய உள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அன்னூர் அடுத்த எல்லப்பாளையம் பவர் ஹவுஸில், நேற்று முன்தினம் இரவு சிறுத்தை நடமாடியதாக, சிலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பெ.நா.பாளையம் வனத்துறையினர், அப்பகுதியில் ஆய்வு செய்தனர். சிறுத்தையின் கால் தடம் எதுவும் அங்கு பிடிபடவில்லை. எனினும், பொதுமக்கள் புகார் தெரிவித்ததால், வனத்துறையினர் எல்லப்பாளையம், ஆவாரம் குளத்தில் நேற்று கண்காணிப்பு கேமரா பொருத்தினர். மேலும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் செங்கல் சூளைகளில் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று தகவல் தெரிவித்துள்ளனர். 14 செங்கல் சூலைகள் சட்டவிரோதமாக செயல்படுவதாக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
சிங்காநல்லூர்: சவுரிபாளையம் 51வது வார்டு பகுதியில், கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குமுறுகின்றனர். கழிவுநீர் கால்வாயில் அடைப்பு காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு, கொசு போன்றவற்றால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர்.
கோவை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு மலைப்பாதையில் கார் உள்பட 4 சக்கர வாகனங்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து செல்ல அறங்காவலர் குழு சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 300 நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது. ஆட்சேபனை இருந்தால் தபால் (அ) இணையதளம் முகவரி மூலமாக புகார் அளிக்கலாம்.
பத்மஸ்ரீ விருது பெற்ற தேக்கம்பட்டி பாப்பம்மாள் பாட்டி உடல்நல குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார்.
அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அன்னூர் முதல், கரியாம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட எல்லப்பாளையம் -துணை மின் நிலைய வளாகத்தில், இன்று மூன்று அடி உயரம் கொண்ட சிறுத்தை புகுந்துள்ளதாகவும், தற்போது இருள் சூழ்ந்துள்ளதால் அவை எங்கு உள்ளது என தென்படவில்லை எனவும் இந்த பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் இன்று வெளிவருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 108வயது மூதாட்டி பாப்பம்மாள். இவருக்கு கடந்தாண்டு இயற்கை விவசாயம் செய்து வந்ததற்காக மத்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இந்நிலையில் இன்று பாப்பம்மாள் பாட்டி சற்று முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.