Coimbatore

News September 13, 2024

நான் ஜிலேபி சாப்பிடவில்லை: வானதி

image

கோவையில் தொழில்முனைவோர்களுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். அப்போது, அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன் பேசிய போது, எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடைக்கு வருவார், ஜிலேப்பி சாப்பிடுவார், காபி குடிப்பார், பின் சண்டை போடுவார் என்றார். இது குறித்து வீடியோ வைரல் ஆன நிலையில், வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், நான் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை என்றார்.

News September 13, 2024

கோவை மக்களே செப்.16-க்குள் புகார் அனுப்பலாம்

image

மேற்கு மண்டல அஞ்சல் துறை சாா்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் செப். மாத மண்டல அளவிலான அஞ்சல் குறைகேட்பு கூட்டம் மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அஞ்சல் வாடிக்கையாளா்கள் புகாா்களை அஞ்சல் துறைத் தலைவா், மேற்கு மண்டல அலுவலகம் கோவை -641030 என்ற முகவரிக்கு செப்.16ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News September 12, 2024

கோவை: ரத்தக் கொடையாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

ஸ்ரீ அன்னை கரங்கள் நல சங்கம் சார்பில் இரத்தக் கொடையாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ‘உயிர்களும் உதிரங்களும்’ என்ற பெயரில் நாளை கோவையில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை கலெக்டர் கிராந்தி குமார் கலந்து கொள்ள உள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் ரத்த தானம் செய்ய உள்ளனர்.

News September 12, 2024

கோவை: ஓணம் பண்டிகைக்காக சிறப்பு ரயில்

image

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து கண்ணூருக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. செப்.14ல் சென்னை சென்ட்ரலில் இருந்து கண்ணூருக்கும், செப்.16- ல் கண்ணூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் இயக்கப்படும் சிறப்பு ரயிலில், 12 முன்பதிவில்லா பெட்டிகளுடன், சில முன்பதிவு பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 12, 2024

கோவை திமுக நிர்வாகி மீது பாலியல் புகார்

image

கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் தான் திமுக நிர்வாகி கதிரேசன் என்பவரது வீட்டில் வீட்டு வேலை செய்து வருகின்றதாகவும் கடந்த சில நாட்களாக திமுக நிர்வாகி தனக்கு பாலியல் தொல்லை அளித்து வருகின்றார். இது சம்பந்தமாக வெளியே சொல்ல பயமாக உள்ளது என்று ஆணையரிடம் மனு அளித்தார்.

News September 12, 2024

கோவையில் 40 நிமிட பயணம் இனி 4 நிமிடம் தான்

image

கோவை சுங்கம் பைபாஸ் சாலை இறங்கு தளம் திறக்கப்பட்டுள்ளதால், உக்கடத்தில் ரூ.482 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலம் நேற்று (செப்.11) முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் கோவையில் நெரிசலின்றி வாகன ஓட்டிகள் பயணிப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலத்தை கடந்துசெல்ல நீண்ட நேரம் தேவைப்படவில்லை. வெறும் 4 நிமிடத்தில் கடந்துசெல்ல முடிகிறது.

News September 12, 2024

கோவையில் அமைச்சர் மதிவேந்தன் முக்கிய தகவல்

image

கோவை வன உயா் பயிற்சியகத்தில் தேசிய வன தியாகிகள் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதில் வனத்துறை அமைச்சா் மதிவேந்தன் பங்கேற்று வன தியாகிகளுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். தொடர்ந்து பேசிய அவர், யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் பழைய தொழில்நுடத்தையே பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு நவீன கருவிகள் வழங்கப்படும் யானை வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.

News September 12, 2024

அரசியல் மாற்றம்: கோவையில் மத்திய அமைச்சர் பேச்சு

image

கோவை மாநகா் மாவட்ட இந்து முன்னணி நடத்திய 37ஆம் ஆண்டு விநாயகா் சதுர்த்தி பொதுக்கூட்டம் தெப்பகுளம் மைதானத்தில் நேற்று அதன் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற தோ்தலில் தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் இந்து எழுச்சியாக ஆன்மிக உணா்வு ஏற்பட்டுள்ளதைப் போல அரசியல் எழுச்சியும் ஏற்பட வேண்டும் என்றார்.

News September 12, 2024

கோவையில் டெங்கு: மக்களே அச்சம் அடையாதீங்க!

image

கோவையில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகளில், பொதுமக்கள் அதிகளவில் சிகிச்சைக்கு வருகின்றனர். வாரம், 10 முதல் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் முன்பைவிட, பெருமளவில் டெங்கு பரவல் தடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா  தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி இன்று கூறியதாவது: நாளை காலை 10.30 மணிக்கு கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில், மாணவ, மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!