India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் க்ரீம் பன்னுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வசூலிப்பதாக அன்னபூர்ணா உரிமையாளர் குற்றம் சாட்டியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது ஆனால் நேற்று கோவை கணபதி பகுதியில் உள்ள அன்னபூர்ணா உணவகத்தில் க்ரீம் பன் வாங்கிய நபர் ஒருவருக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி என பில் போடபட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
➤சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவராக பணியாற்றி வந்த சதிஷ் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம். ➤ஜிஎஸ்டி குறித்து பேசியது தொடர்பாக விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக அன்னபூர்ணா நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ➤தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ➤திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் செய்தியாளரின் செல்போன் பறிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு, அன்னபூர்ணா உணவக உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்தது கண்டிக்கதக்கது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் தனது கழுத்தில் BUN-னுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் இன்று குருப்-2 தேர்வு நடைபெறுகின்றது. இந்த தேர்வை எழுத தேர்வு அறைக்கு குறித்த நேரத்தில் வர வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் இன்று தேர்வு நேரம் முடிந்து கடைசி நேரத்தில் தேர்வு எழுத வந்த மாணவியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, உங்களை உள்ளே அனுப்பினால் எனது வேலை போய்விடும் என கையெடுத்து கும்பிட்டார். இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது. பாரதிய ஜனதா கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக சிங்காநல்லூர் மண்டல தலைவராக பணியாற்றி வந்த சதிஷ், கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அன்னபூர்ணா ஹோட்டல் குறித்து தவறாக தகவல் பரப்பியதாக அவர், மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக இன்று கூறியதாவது, கோவை நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் எனும் தேசிய மக்கள் நீதி மன்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நீதிபதி விஜயா தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாமில் பொதுமக்கள் நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை பரிசீலித்து அதற்கு உடனுக்குடன் தீர்வு கான படும் என்று தெரிவி்த்துள்ளனர்.
உயிர் பூச்சிக்கொல்லி பண்புடைய தாவரங்களான ஆடா தொடா, நொச்சி போன்றவைகள் வேளாண்மை துறையில் இலவசமாக வழங்கப்படுகிறது.விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்தும் பெறலாம். காரமடை மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்தை அணுகியும் பெறலாம் என காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்யலட்சுமி, தெரிவித்துள்ளார்.
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி மலை கோயிலுக்கு காரில் செல்வதற்கு பக்தர்கள் அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. மேலும் பைக் மூலமாகவும், மலைப்படிகள் வழியாகவும் கோயிலின் பேருந்து மூலமும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
கோவை இன்று ஆடிஸ் வீதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திமுக கணபதி ராஜ்குமார் எம்.பி. கூறியதாவது அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் முகம் கோவை மக்களின் முகம். எனவே சீனிவாசனை அவமானப்படுத்தியது கோவை மக்களையே அவமான படுத்தியது போல். சீனிவாசன் பேசியது சரிதான் அவருக்கு ஆதரவாக திமுக துணை நிற்கும். கேள்விக்கு பதில் சொல்லாமல் மன்னிப்பு கேட்க வைத்தது மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
கோவை தொழில் முனைவோர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் தொழிலதிபர் ஸ்ரீனிவாசன், ஜிஎஸ்டி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதனையடுத்து ஸ்ரீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டார். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில், கேள்வி கேட்ட தொழிலதிபரை மன்னிப்பு கேட்க வைத்ததாக பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து, அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.