Coimbatore

News April 18, 2024

கூகுள் பே மூலமாக பணம் பட்டுவாடா

image

கோவை தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில், அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதியில் பாஜகவினர், வாக்காளர்களுக்கு G-Pay மூலம் பணம் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, திமுக வழக்கறிஞர் அணியினர் சார்பில் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிராந்திகுமார் பாடியிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

News April 18, 2024

பள்ளி மாணவர்களுக்கான குறிஞ்சி நிகழ்ச்சி

image

கோவை மருதமலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக குறிஞ்சி எனும் தலைப்பில் கோடை கால முகாம் நடத்துவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான முகாம் வரும் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில், அறிவியல், கலை, மற்றும் சமுக அறிவியல் பாடத்திட்டத்தில் உள்ள பல்வேறு சந்தேகங்களைத் புரிய வைக்கும் நிகழ்ச்சியாக நடைபெறும் என இன்று கூறப்பட்டுள்ளது.

News April 18, 2024

ஆட்சியரிடம் புகார் அளித்த பாஜக மாவட்ட செயலாளர்

image

கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆளும் திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால், கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், இன்று (ஏப்ரல்.18) கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடியை சந்தித்து புகார் அளித்தனர்.

News April 18, 2024

சட்ட விரோதமாக கோவையில் தங்கியுள்ள நபர்கள்

image

கோவை வடக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளராக இருக்கும் பழனிச்சாமி, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் இன்று புகார் மனு அளித்தார். அதில், அவிநாசி சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை அருகே பாஜக தேர்தல் அலுவலகத்தில், வெளியூர் ஆட்கள் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலைபேசி மற்றும் தொலைபேசி வாயிலாக, வாக்காளர்களை தொடர்பு கொண்டு அண்ணாமலைக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்து வருவதாக கூறினார்.

News April 18, 2024

பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த <>லிங்க்<<>>-ஐ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

கோயம்புத்தூர் தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த <>லிங்க்<<>>-ஐ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

கோவையில் நாளை இலவச ரேபிடோ சேவை

image

தமிழ்நாடு தேர்தல் ஆணையம், பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ உடன் இணைந்து இலவச பைக் டாக்சி சேவையை வழங்குகிறது. தமிழ்நாட்டின் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 5 நகரங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்த இலவச சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி செல்லும் வாக்காளர்கள் ரேபிடோ செயலியில் பைக் டாக்சி புக் செய்து “VOTENOW” என்ற CODE -ஐ பயன்படுத்தினால் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய முடியும்.

News April 18, 2024

கோவை: மாயமான 6 பேரில் 5 பேர் திரும்பிவிட்டனர்

image

ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி இதுவரை காணாமல் போன 6 பேரில் 5 பேர் திரும்பி விட்டனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. சகோதரரை மீட்டு தரக்கோரி விவசாயி திருமலை என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் காவல்துறையின் விளக்கத்தை ஏற்று வழக்கை ஜூன் 7ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News April 18, 2024

அண்ணாமலை க்காக விரலை வெட்டிய நபர்

image

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்ட 10 நாட்களாக கோவையில் தங்கி ஆதரவு திரட்டி வருகிறார் துரைராமலிங்கம். இவர் நேற்று பிரச்சாரம் முடிந்த நிலையில், அண்ணாமலை தோற்று விடுவார் என சிலர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த துரை ராமலிங்கம், அண்ணாமலை தான் வெற்றி பெற வேண்டும் என்று கூறி கத்தியை எடுத்து அவரது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார்.

News April 18, 2024

வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி

image

தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஏப்ரல்.18) கோவை மாவட்டத்தில் 3096 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் குறிப்பிட்ட மையத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு இந்த இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.