Coimbatore

News April 21, 2024

கறிக்கடை மூடப்படும், மாநகராட்சி நிர்வாகம்

image

இன்று, (ஏப்ரல் 21, 2024) மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே இன்று கோவை மாநகரில் இறைச்சி கடைகளை மூட கோவை மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் என்று தெரிவித்துள்ளார். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News April 20, 2024

கோவை: ஆட்சியர் முன்னிலையில் சீல்

image

கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் Strong ரூமில் வைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் முன்னிலையில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கக்கூடிய பணி நடைபெற்றது. இந்நிலையில், இன்று மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள Strong ரூமில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் சீல் வைத்தார்.

News April 20, 2024

தமிழக-கேரள எல்லையில் பலத்த சோதனை

image

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று தமிழக-கேரள மாநில எல்லைப்பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு , வேலந்தாவளம் , மேல்பாவி , முள்ளி,மீனாட்சிபுரம், கோபாலபுரம் நடுப்புணி , ஜமீன்காளியாபுரம் , வடக்காடு உள்பட 12 சோதனைச் சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்பு துறையின் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News April 20, 2024

கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு

image

கிருஷ்ணகிரி பர்கூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் திருப்பதி. கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஒரு மோசடி வழக்கில் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு 2022ம் ஆண்டு கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் இவருக்கு சிறையில் மூச்சு திணறல் ஏற்பட்டது. கோவை ஜிஎச்சில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News April 19, 2024

கோவையில் 71.17% வாக்குகள் பதிவு

image

மாநிலம் முழுவதும் 39 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் கோவை மக்களவை தொகுதியில் 71.17% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. பொள்ளாச்சியில் 72.22%,  நீலகிரியில் 71.7 % வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். 

News April 19, 2024

104 வயதில் வாக்களித்த முதியவர்

image

 கோவை மக்களவை தொகுதியில் 104 வயது முதியவர் தனது மகன் மற்றும் பேரன் கொள்ளு பேரன்களுடன் வந்து வாக்களித்துள்ளார். கோவை கணியூர் அடுத்த ஊஞ்சபாளையம் கிராமத்தை சேர்ந்த கணபதி 104 வயதில் ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளார்.

News April 19, 2024

கோவை: புது மாப்பிள்ளை தற்கொலை

image

கோவை குனியமுத்தூரரை சேர்ந்தவர் முருகானந்தம்(28). இவரது மனைவி ரோஹினி(26). இவர்களுக்கு கடந்த 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன நாள் முதல் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முருகானந்தம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 19, 2024

பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி வாக்களிப்பு

image

தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் அழகப்பா சாலையில் உள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் இன்று காலை 8 மணிக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

News April 19, 2024

வாக்கு செலுத்திய 100 வயதை கடந்த மூதாட்டி

image

கோவையில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேர்தலுக்கு வாக்களிக்க, சுகுணாபுரம் பகுதியில் வசித்து வரும் 102 வயது மூதாட்டி முத்தாயம்மாள் சுகுணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் உதவியுடன் வீல் சேரில் வந்து வாக்களித்தார். இதை பற்றி அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கூறியதாவது, வாக்களிப்பது என்னுடை உரிமை என்று மூதாட்டி கூறியதாக தெரிவித்தனர்.

News April 19, 2024

நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்ட ஆட்சியர்

image

கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இன்று (ஏப்ரல். 19)கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கோவை மாவட்ட ஆட்சித்தலைவருமான கிராந்திகுமார் பாடி நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார். தொடர்ந்து, அனைத்து குடிமகன்களும் தனது ஜனநாயக கடமையான வாக்குரிமையை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.