India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெள்ளியங்கிரி வனதுறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்கள், வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும். மாற்று பாதைகளில் செல்லக்கூடாது. மலையேறும் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு உணவு அளிக்க கூடாது. மேலும் இருதய நோய் சம்பந்தப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மூச்சுத்திணறல் பரிசோதனை செய்த பின்னரே மலையேறுவதற்கு அனுமதிப்படுவர் என வனத்துறை கூறியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வாத்து, கோழி பண்ணைகளில் பறவைகள் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதால், தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கால்நடைகள் பராமரிப்பு துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை மாவட்ட கால்நடைகள் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி நேற்று கூறுகையில், “தமிழகத்தில் பறவை காய்ச்சல் தொற்று இல்லை” என தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் நடந்த ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக செல்போனில் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு வருகிறது. இந்த அழைப்பில் தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் ? அதிமுகவுக்கு என்றால் இந்த எண்ணை அழுத்தவும், திமுகவுக்கு என்றால் இந்த எண்ணை அழுத்தவும் என கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டு வருகிறது. இது வாடிக்கையாளர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
மார்த்தாண்டத்தை சேர்ந்த ஜோஸ்மோன், நண்பர்கள் விஜின், சுஜின் உள்ளிட்டோருடன் மதுக்கரையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டின் அருகே டூவீலர் நிறுத்துவதில் அப்பகுதியை சேர்ந்த தனுஷ் குமாரிடம் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜின் அடித்து கொல்லப்பட்டார். இப்புகாரின் பேரில் தனுஷ் குமார், சிறுவன் உட்பட 10 பேர் கும்பலை நேற்று கைது செய்தனர்.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று (ஏப்ரல். 21) நடைபெற்றது. நிகழ்ச்சி அமைச்சர்கள் சக்கரபாணி, முத்துசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி (ம) ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவினர் வாக்குகள் மாயமாகி உள்ளது எனக் குற்றம்சாட்டினார். இதற்கு கோவை ஆட்சியர் இன்று விளக்கம் அளித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு முறை வாக்காளர் பட்டியல் வெளியிடும் போதும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “கோவையில் இருந்து ஏப்.23 முதல் ஜூன்.25 வரை கோவை விடுமுறையை முன்னிட்டு கோவை – பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருப்பூா், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா் , நெல்லூா், விஜயவாடா, முனிகுடா , சம்பல்பூா் , ரூா்கேலா, ஹாட்டியா, தன்பாத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை காந்திமா நகரை சேர்ந்த தாமஸ் வில்லியம், சரவணம்பட்டி பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்றிரவு ஒர்க் ஷாப்பை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், எதிர்பாரா விதமாக ஒர்க் ஷாப்பில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் மூன்று கார்கள், இரு டூவீலர்கள் தீயில் எரிந்து நாசமாயின.

Sorry, no posts matched your criteria.