India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 2008ல் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக, ‘108’ ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை, ‘108’ ஆம்புலன்ஸ் வாயிலாக, 58,162 பேர் பயனடைந்துள்ளனர். பிரசவ மருத்துவ தேவைக்காக, 8,761 பேர், விபத்து சிகிச்சைக்காக 15,128 பேர், இருதய சிகிச்சைக்காக 4,104 பேர், இதர மருத்துவ தேவைக்காக 30,169 பேர், ‘108’ ஆம்புலன்ஸ் வாயிலாக பயன் அடைந்துள்ளனர்,
அன்னூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கல்ராசி பாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற அஜித்(எ) முனியாண்டி (24) என்பவரை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டு அவரிடம் இருந்த சொகுசு காரை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புதிட்டம், கோவை வடக்கு வட்டம் பகுதியில் நாளை 18.09.2024 காலை 9 மணி முதல் 19.09.2024 காலை 9 மணி நடைபெறுகிறது. இதில் ஒரு பகுதியாக பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பொதுமக்கள் தங்கள் குறைகளின் மனுவை நேரில் அளித்து குறைகளை கூறலாம்.
பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு கோயம்பத்தூரில் உள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியில் இன்று நடந்த இலவச தேநீர் வழங்கும் நிகழ்ச்சியில் பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா மற்றும் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்பொழுது பிரதமர் மோடியின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினர்.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 21ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை, கோவை பொள்ளாச்சி பிரதான சாலை ஈச்சனாரியில் அமைந்துள்ள ரத்தினம் கல்லூரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
கோவையில் மிலாது நபி பண்டிகையையொட்டி 40,000 பிரியாணி பொதுமக்களுக்கு வாங்குவதற்காக நள்ளிரவு தொடங்கி மும்முரமாக பணி நடைபெற்று வருகிறது. பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர்கள் இன்று உக்கடம், ஜி.எம்.நகர், கோட்டைமேடு, கரும்புக்கடை ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இன்று இலவசமாக பிரியாணிகள் வழங்க உள்ளனர்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள கேரள மாநில எல்லைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று (செப்டம்பர் 16) முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
37 கட்டிடங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் விமலாவின் செக் பவரை ரத்து செய்து சில மாதங்களுக்கு முன் கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்த உத்தரவை ரத்து செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.
கோவை GST கூட்டத்தில் தொழில்முனைவோரை அவமானப்படுத்தி மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களைக் கண்டித்து கோவை மாவட்ட திமுக இந்திய கூட்டணிக் கட்சிகளின்” சார்பில் கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் திமுக இந்திய கூட்டணிக் கட்சிகளின் மாநில, மாவட்டத் தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
பரம்பிக்குளம் ஆழியார் திட்ட நீர்வளத்துறையின் செயற்பொறியாளராக பொறுப்பேற்றுக்கொண்ட கார்த்திகேயனை இன்று ஆழியார் பாசன திட்ட குழு தலைவர் அரசூர் செந்தில் தலைமையில் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர்கள் பிரபாகரன் வித்தியாசாகர் மற்றும் ஆழியார் படுகை புதிய பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் அசோக் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.