India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், மலையிடப் பகுதியில் 2016 அக்.20ஆம் தேதி அல்லது அதற்கு முன் பகுதியாகவோ, முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனை பிரிவில் அமையும் விற்கப்பட்ட, விற்கப்படாத அனைத்து மனைகள், மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த நவ.30 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் இணையதளம் முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் 21ம் தேதி, கோவை ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில், காலை 8 முதல் மாலை 3 மணி வரை நடத்தப்படுகிறது. இதுவரை, 250 தனியார் நிறுவனங்களும், 3,000த்துக்கும் மேற்பட்ட வேலை தேடுவோரும் பதிவு செய்துள்ளனர் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்
சென்னை மாநகராட்சியில் கடந்த 2018ம் ஆண்டு விதிகளை மீறி டெண்டர் ஒதுக்கியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். மழைநீர் வடிகால், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில் ₹26.61 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது.
கோவையில் 27வது மாநில வனத்துறை விளையாட்டு போட்டிகள் நாளை காலை துவங்க உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் வருகை தர உள்ளதாக இன்று கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தெரிவித்தார். மேலும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் போட்டிகளை துவக்கி வைக்க உள்ளதாக கூறினார்.
நவராத்திரி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கோவையில் கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. அக்டோபர் 3 முதல் 10 நாட்கள் நடைபெறும் இப்பண்டிகையில் கொலு பொம்மைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் கோவை மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து ஆர்வத்துடன் கொலு பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர் என கோவை கொழு பொம்மை விற்பனையாளர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
கோவை கலெக்டர் இன்று கூறியதாவது. முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளில் 2024-25ம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, தொழில் மற்றும் தொழில் சார்ந்த அரசு ஒழுங்குமுறை அமைப்புகளால் உருவாக்கப்பட்ட பட்டப் படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கு, முப்படை வீரர் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்.
கோவையில் அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் நடத்தும் தங்கும் பெண்கள் விடுதி, பெண் குழந்தைகள், சிறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் மகளிர் விடுதிகள் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள், அனைத்தும் இணையம் வாயிலாக பதிவு செய்து, உரிமம் பெற வேண்டும். தவறும் விடுதிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் எச்சரித்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக பலியானது உறுதியாகி உள்ள நிலையில் அருகில் உள்ள மாவட்டமான கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் சோதனைகளை தீவிர படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதன் ஒரு பகுதியாக காரமடையை அடுத்துள்ள கோபனாரி, முள்ளி சோதனை சாவடிகளில் சுகாதார துறையினர் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர். வரும் வாகனங்களை அதிகாரிகள் சோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்கின்றனர்.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் சைமா ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2024 – 25ஆம் ஆண்டுக்கான சைமா தலைவராக சிவா டெக்ஸ்யாா்ன் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எஸ்.கே.சுந்தரராமன் ஒருமனதாக மீண்டும் தோ்வுசெய்யப்பட்டாா். இவர் கோவை இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவராகவும், இந்திய தொழில்நுட்ப ஜவுளி சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை வடவள்ளியை சோ்ந்த கிருஷ்ணகுமாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வாட்ஸ்அப்பில் வந்து தகவலில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறிப்பிட்டிருந்தது. இதனை நம்பி அதிலிருந்த நம்பரை தொடர்புகொண்டு பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ.1.14 கோடி முதலீடு செய்துள்ளார். இரு மாதங்களாகியும் பணம் வரவில்லை. இப்புகாரின்பேரில் கோவை சிட்டி கமிஷனர் அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.