Coimbatore

News September 29, 2024

அக்.1 ஆம் தேதி சிறப்பு பட்டா மாறுதல் முகாம்

image

கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கோவை மாவட்ட நிர்வாகம், கோவை மாநகராட்சி இணைந்து வரும் அக்.1ஆம் தேதி சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடத்த உள்ளது. மசக்காளிபாளையம் ஹர்ஷா மஹாலில் நடைபெற உள்ள இம்முகாமில் கூட்டு பட்டா, தனிப்பட்டா, நில அளவை உள்ளிட்ட பல சேவைகள் உடனடியாக நிவர்த்தி செய்ய உள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

News September 29, 2024

சிறுத்தையைப் பிடிக்க கேமரா பொருத்தம்

image

அன்னூர் அடுத்த எல்லப்பாளையம் பவர் ஹவுஸில், நேற்று முன்தினம் இரவு சிறுத்தை நடமாடியதாக, சிலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பெ.நா.பாளையம் வனத்துறையினர், அப்பகுதியில் ஆய்வு செய்தனர். சிறுத்தையின் கால் தடம் எதுவும் அங்கு பிடிபடவில்லை. எனினும், பொதுமக்கள் புகார் தெரிவித்ததால், வனத்துறையினர் எல்லப்பாளையம், ஆவாரம் குளத்தில் நேற்று கண்காணிப்பு கேமரா பொருத்தினர். மேலும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

News September 28, 2024

செங்கல் சூலையில் ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பு

image

கோவை மாவட்டத்தில் செங்கல் சூளைகளில் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று தகவல் தெரிவித்துள்ளனர். 14 செங்கல் சூலைகள் சட்டவிரோதமாக செயல்படுவதாக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

News September 28, 2024

சிங்காநல்லூர்: கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

image

சிங்காநல்லூர்: சவுரிபாளையம் 51வது வார்டு பகுதியில், கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குமுறுகின்றனர். கழிவுநீர் கால்வாயில் அடைப்பு காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு, கொசு போன்றவற்றால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர்.

News September 28, 2024

மருதமலை கோவிலுக்கு செல்ல இ-பாஸ்

image

கோவை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு மலைப்பாதையில் கார் உள்பட 4 சக்கர வாகனங்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து செல்ல அறங்காவலர் குழு சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 300 நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது. ஆட்சேபனை இருந்தால் தபால் (அ) இணையதளம் முகவரி மூலமாக புகார் அளிக்கலாம்.

News September 28, 2024

பாப்பம்மாள் பாட்டி மறைவு: தலைவர்கள் இரங்கல்

image

பத்மஸ்ரீ விருது பெற்ற தேக்கம்பட்டி பாப்பம்மாள் பாட்டி உடல்நல குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார்.
அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

News September 27, 2024

நீங்க அன்னூரா, ஜாக்கிரதையா இருங்க

image

அன்னூர் முதல், கரியாம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட எல்லப்பாளையம் -துணை மின் நிலைய வளாகத்தில், இன்று மூன்று அடி உயரம் கொண்ட சிறுத்தை புகுந்துள்ளதாகவும், தற்போது இருள் சூழ்ந்துள்ளதால் அவை எங்கு உள்ளது என தென்படவில்லை எனவும் இந்த பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் இன்று வெளிவருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

News September 27, 2024

கோவை பாப்பம்மாள் பாட்டி உயிரிழப்பு

image

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 108வயது மூதாட்டி பாப்பம்மாள். இவருக்கு கடந்தாண்டு இயற்கை விவசாயம் செய்து வந்ததற்காக மத்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இந்நிலையில் இன்று பாப்பம்மாள் பாட்டி சற்று முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 27, 2024

யானை தந்தம் விற்க முயற்சி, 5 பேர் கைது

image

கோவை கவுண்டம்பாளையம் அருகில் உள்ள, தனியார் குடோனில் யானை தந்தங்கள் விற்க முயற்சி செய்வதாக தமிழ்நாடு வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டு ஆணையத்திற்க்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்த்து அங்கு சோதனை செய்ததில், சுமதி (55), ஆஸாத் அலி(45), நஞ்சப்பன் (47), சந்தோஷ் பாபு (42), 5.கோவிந்தராஜுலு(65) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News September 27, 2024

மருதமலையில் 300 கார்களுக்கு மட்டும் அனுமதி

image

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மலைப்பாதையில் கார் உள்பட 4 சக்கர வாகனங்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்படி காலை 6 முதல் மதியம் 1 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களும் மதியம் 1 முதல் மாலை 6 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களும் என நாள் ஒன்றுக்கு 300 நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என இன்று தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!