Coimbatore

News October 1, 2024

கோவையில் நாளை இறைச்சி கடைகளுக்கு தடை

image

கோவை மாவட்ட ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு, நாளை (02.10.2024) தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கோவையில் செயல்படும் இறைச்சி கடைகளை மூடும்படி தெரிவிக்கப்படுகிறது. மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் உரிமம் ரத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News October 1, 2024

கோவையிலிருந்து கோவாவுக்கு மீண்டும் விமான சேவை

image

கோவை நெக்ஸ்ட் அமைப்பின் தலைவா் சதீஷ் கூறுகையில், தமிழகத்தின் 2வது பெரிய விமான நிலையமான கோவையிலிருந்து தற்போதுள்ள 27 புறப்பாடுகளில் இருந்து தினமும் 30-க்கும் அதிகமான புறப்பாடுகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் கோவையில் உள்ள ஒரே ஏடிஆா் விமானத்துடன் அக்.1 முதல் கோவாவுக்கான தினசரி விமான சேவைக்கான முன்பதிவை தொடங்குகிறது. அக்.27ஆம் தேதியிலிருந்து இந்த சேவை தொடங்குகிறது என்றார்.

News October 1, 2024

கோவை: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

கோவை மாவட்டத்தில், நாளை (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் பார்களில் மது விற்பனை ஏதும் நடைபெறாது. மேலும் அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News September 30, 2024

கோவை மாநகராட்சியுடன் இணையும் ஊராட்சிகள்

image

கோவை மாநகராட்சி நிர்வாகம் நேற்று கூறியதாவது. கோவை மாநகராட்சியுடன், மதுக்கரை நகராட்சியை இணைப்பதாகவும், இருகூர், பேரூர், பள்ளபாளையம், வெள்ளளூர் ஆகிய பகுதிகளை, 4 பேருராட்சிகளாகவும், குருடம் பாளையம், சோமையம் பாளையம், பேரூர் செட்டிப்பாளையம், கீரணத்தம், நீலாம்பூர் உள்ளிட்ட 11 ஊராட்சிகளை இணைக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News September 30, 2024

கோவையில் 22 சவரன் நகை, 5 லட்சம் கொள்ளை

image

கோவை, ஆலந்துறை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை நேற்று உடைத்த மர்மநபர்கள், 22 சவரன் நகை மற்றும் 5 லட்சத்து 32 ஆயிரம் பணம் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து ஆலந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, திருடு போன வீட்டில் கைரேகைகளை சேகரித்து, இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

News September 30, 2024

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

image

கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் தர்மராஜா கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (47). இவர் நேற்று இரவு வீட்டின் முன்பு உள்ள மரத்தடியில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே வந்த காட்டு யானை சத்தம் கேட்டு எழுந்து ஓடினார். விடாமல் துரத்திய காட்டு யானை சந்திரனை பின்பகுதியில் தும்பிக்கையால் தாக்கி, காலால் மிதித்து கொன்றது.

News September 30, 2024

“துணை முதல்வர் பதவி வாரிசு அரசியலை காட்டுகிறது”

image

கோவை ராமநாதபுரத்தில் உள்ள பாஜக நிர்வாகி வீட்டில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியினை கட்சியினரோடு சேர்ந்து பார்த்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில், திமுகவில் மூத்த அமைச்சர்கள் பலர் இருக்கும்போதும், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பது வாரிசு அரசியலை காட்டுகிறது என்றார்.

News September 30, 2024

கோவையில் மருத்துவமனையை திறந்து வைத்த எம்.பி

image

கோவை அரவிந்த் கண் மருத்துவமனையின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை தொகுதி எம்.பி கணபதி ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் கிருஷ்ணராஜ் வானவராயர் (சேர்மன் BVB), வனிதா மோகன்(சிறுதுளி), சஞ்சய் ஜெயவர்த்தனே (MD, LMW) மற்றும் கோவை தொழில்துறை நிறுவனர்கள் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

News September 29, 2024

கோவையில் சிறப்பு ரயில் நீட்டிப்பு

image

கோவை ரயில்வே துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கொச்சுவேலி-பெங்களூரு வாராந்தர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெங்களூர்-கொச்சுவேலி சிறப்பு ரயில் பெங்களூருவில் இருந்து, வரும் 2ஆம் தேதி முதல், நவ., 6ஆம் தேதி வரை, புதன்கிழமை தோறும் மதியம் 12:45 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் காலை 6:45 மணிக்கு, கொச்சுவேலியைச் சென்றடையும். புதன்கிழமைகளில் இரவு 8: 15 மணிக்கு போத்தனுாரையும் அடையும் என்றனர்.

News September 29, 2024

ஒரு டன் இளநீர் பண்ணை விலை ரூ.16000 நிர்ணயம்

image

தேங்காய் மற்றும் கொப்பரை விலை தொடர்ந்து உயர்ந்து காணப்படுவதால் இந்த வாரம் இளநீரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நாளை ( செப் 30) முதல் இளநீர் விலை கடந்த வார விலையில் இருந்து ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.41 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு டன் இளநீரின் பண்ணை விலை ரூ.16000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

error: Content is protected !!