Coimbatore

News March 25, 2025

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

image

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 45ஆவது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, செல்வம் ஐஏஎஸ், வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் சிறப்பு மற்றும் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பின்னர் 4,611 மாணவர்கள் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2025

தமிழக ஆளுநர் இன்று கோவை வருகை

image

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 45வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று கோவை வருகிறார். காலை 8:20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர், காலை 9:25 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின், கோவை வேளாண் கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு மாலை சென்னை திரும்புகிறார்.

News March 25, 2025

ஜெ.வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

image

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தனிப்படை முன்பு வரும் மார்.27ஆம் தேதி சுதாகரன் ஆஜராகும்படி கோவை சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. இதனையடுத்து அவர் அன்று ஆஜராவார் என கூறப்படுகிறது.

News March 25, 2025

கொங்கு நாட்டு விலங்கு! கின்னஸ் சாதனை

image

கேரளாவில் விவசாயி ஒருவரின் வீட்டில் வளரும் கொங்குநாடு வெள்ளாடு ஒன்று பலரும் ஆச்சரியப்பட்ட அளவிற்கு இருக்கிறது. பீட்டர் என்பவர் ஆடு, கோழி, பசு உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார். அந்த ஆடு 1 அடி 3 அங்குலம் (40.50 செ.மீ.) உயரமும், 1 அடி 1 அங்குலம் (33.5 செ.மீ.) அகலம் இருக்கிறது. இந்த ஆடு தான் உலகில் வாழும் ஆடுகளில் மிகக் குட்டையான ஆடு என அங்கீகாரம் பெற்றுள்ளது. கொங்குநாட்டு மக்களே ஷேர் பண்ணுங்க

News March 25, 2025

BREAKING: வெள்ளிங்கிரி மலையில் பக்தர் ஒருவர் உயிரிழப்பு

image

கோவை, வெள்ளியங்கிரி மலையை ஏறி கீழே இறங்கும் போது திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவா என்பவர் 3வது மலையில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். மேலும் இவர் ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை இருந்ததாகவும் அறுவை சிகிச்சை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆலாந்துறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 25, 2025

கோவை மக்களே கட்டாயம்! மிஸ் பண்ணிடாதீங்க

image

கோவை: தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் மார்ச்.31ஆம் தேதிக்குள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் எனவும், கைரேகையை பதிவு செய்யாத குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும். மிஸ் பண்ணிடாதீங்க. SHARE பண்ணுங்க

News March 24, 2025

தண்ணி லாரி, டிராக்டர் உரிமையாளர்கள் கவனத்திற்கு

image

கோவையில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பிக் கொடுக்க, மேல்நிலைத்தொட்டிகள் கட்டி, 24 மணி நேரமும் அரசு அனுமதிக்கும் கட்டணத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து தண்ணீர் லாரி மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் தங்களது விபரங்கள் மற்றும் நாளொன்றுக்கு தேவையான தண்ணீர் விபரத்தை, cityengineer.coimbatore@gmail.com, Whatsapp No: 99440-64948 வாயிலாக தெரிவிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

News March 24, 2025

போஸ்ட் ஆபீஸ் வேலை: நீங்க பாஸா

image

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் நிரப்பப்படும் போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் கோவை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. <>இங்கு கிளிக் செய்க.<<>> இதில் ஊதியம் ரூ.12,000 முதல் ரூ.29,000 வரை வழங்கப்படும். ( SHARE பண்ணுங்க)

News March 24, 2025

ஹெல்மெட் போட்டாதான் அனுமதி

image

கோவை கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழையும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. கோவை அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் மனு அளிக்க இருசக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

News March 24, 2025

2.72 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்

image

கோவை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையின் கீழ் நடைபெற்ற வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாமில் 2.72 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டது. கடந்த மார்ச்.17ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இம்முகாமில் 6 முதல் 12 மாதம் உள்ள 36,715 குழந்தைகளுக்கும், 1 முதல் 3 வயது வரை உள்ள 89,994 குழந்தைகள் என மொத்தம் 2.72 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் “ஏ” திரவம் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!