India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மக்களே, உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைக மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <
கோவை மக்களே, இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க இன்றே(ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள், உடனே <
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று கைத்தறித்துறையின் சார்பில் 11 வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் சரகத்திற்குட்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யும் ஜவுளி இரகங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்குகளை மாவட்ட ஆட்சியர், பவன்குமார் திறந்து வைத்து பார்வையிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் இன்று (06.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (06.08.2025) வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், மண்டல அளவில் பதிவுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஆகியோர் உள்ளனர்.
கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட்.6) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
கோவை TNAU-வில் பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை 2025 – 2026 முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் (08.08.2025 மற்றும் 09.08.2025) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் விபரம் http://tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 94886-35077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை தொடர்பான 55 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறு விசாரணை 1 மனு (FIR), 45 மனுக்கு சுமூகமான முறையிலும் 09 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்ய பரிந்துரை செய்து தீர்வு காணப்பட்டது.
கோவையில் உள்ள பெரிய கடைவீதி காவல் நிலையத்தில், 60 வயதான ராஜன் என்பவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, காவல் நிலையத்தில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இறந்தவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
பலரும் அறிந்திடாத ஓர் அற்புதமான மலைக்கோயில்தான் பதிமலை பாலமுருகன் கோயில். இக்கோயில் கோவை, ஒத்தக்கால் மண்டபம் பிச்சனூர் அருகே அமைந்துள்ளது. கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், இங்கு மனமுருக வேண்டினால் விரைவில் பலிக்குமென்பது ஐதீகம். செங்கற்களை அடுக்கிவைத்து வேண்டினால், விரைவில் சொந்த வீடு வாங்கும் யோகம் அமையும் என்பது நம்பிக்கை. சொந்த வீடு கனவு காணும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.