India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤ கோவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். ➤ ஊட்டி மலை ரயில் சேவை வரும் நவ.7ஆம் தேதி வரை ரத்து. ➤ ஜடையம்பாளையத்தில் பொறியாளரை போலீசார் அடித்து உதைத்த வீடியோ வைரல் ஆன நிலையில், அவரைகளை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ➤ கோவையில் மணி- நாகஜோதி தம்பதியின் குழந்தைக்கு திராவிட செல்வன் என முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 3ஆம் தேதி நீலகிரியில் பெய்த கனமழையால் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. சீரமைப்பு பணிகளுக்காக இன்று வரை ரயில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ரயில் பாதையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் வரும் நவ.7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
கோவை வால்பாறை வனத்துறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் வனவிலங்குகள் அதிகளவில் நடமாடுகின்றன. இந்த வழியாக வால்பாறைக்கு, வாகனங்களில் சுற்றுலா செல்லும் பயணியர், தேவையில்லாமல் வனவிலங்குகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். மீறினால், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
கோவையில் இன்று ரூ.158.32 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்ப பூங்கா கட்டிடம் கட்டும் பணியினை துவக்கி வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்திருந்தார். துவக்கி வைத்த பின் அவர் தனது எக்ஸ் தளத்தில், “நல்லா இருக்கீங்களா தலைவரே”.. கோவை விமான நிலையம் முதல் எல்காட் வரையில் திரண்டிருந்த மக்களின் வரவேற்பு 4 கிமீ கடக்க ஒரு மணி நேரமானது. கோவை மக்களின் அன்பு என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
கோவையில் பொற்கோளர்கள் அதிகம் வசிக்கும் கெம்பட்டி காலனி பகுதியில் இன்று ஆய்வு நடைபெற்றது. அப்போது பொற்கொல்லர் பட்டறைக்கு நேரடியாகவே சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும் தங்க நகை தயாரிப்பு குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி உடனிருந்தனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ.5) கோவை வந்த நிலையில் அவரது நாளைய நிகழ்ச்சிகளின் கால அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி காலை 9:45 மணிக்கு நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து 10.30 மணி அளவில் கோவை விமான நிலையம் புறப்பட்டு, 10.45 க்கு கோவை விமான நிலையம் சென்றடைவார். பின் 11.35 மணிக்கு இண்டிகோ விமானம் மூலம் சென்னை புறப்பட்டு, மதியம் 12.35 க்கு சென்னை சென்றடைவார்.
கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள அம்பிகா லாட்ஜில் வேடப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மற்றும் அவருடைய மனைவி வக்தசலா ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவலறிந்து விரைந்த காந்திபுரம் காவல்நிலைய ஆய்வாளர் தவுலத் நிஷா இன்று இருவரது உடலையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தங்களது சாவுக்கு காரணம் யாரும் இல்லை என்ற கடிதம் கைப்பற்றியுள்ளனர்.
கோவை மாநகர காவல் துறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வருகையையொட்டி மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மண்டலத்தைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார், வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர், மோப்ப நாய் பிரிவினர் உள்ளிட்ட சிறப்பு படைப் பிரிவினர் பாதுகாப்புப் பணிகளில் இன்று ஈடுபட்டுள்ளனர்.
மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் பங்கேற்க இப்பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம். இப்பயிற்சி பெற விரும்புவோர், www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பிக்க வேண்டும் என, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
கோவை எஸ்.பி கார்த்திகேயன் நேற்று மாலை விடுத்த செய்தி குறிப்பில், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள். காவல் கட்டுப்பாட்டு அறை எண் – 94981-81212, whatsapp எண் 77081-00100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் ரகசியங்கள் காக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.