India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காந்திபுரம் சிறைச்சாலையில் மைதானத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் எட்டு தளங்களுடன் அடிப்பரப்பில் அமைய உள்ள 1,98,000 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார். இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். முதல்வர் மேடை ஏறும்போது ‘அஜித்தே கடவுளே’ என்று சிலர் கோஷம் எழுப்பினர்
கோவையில் புதிய நூலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கோவையில் டைடல் பார்க் அருகில் மேலும் ஒரு தகவல் தொழில் பூங்கா அமைக்கப்படும்; அவினாசி சாலையில் உள்ள உயர்மட்ட மேம்பாலம், சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை நீட்டிக்கப்படும். மேலும் தொண்டாமுத்தூர் பகுதியில் 10 கி.மீ. யானை புகாத வகையில் நவீன வேலிகள் அமைக்கப்படும் என கூறினார்.
கோவை காந்திபுரம் அனுப்பர்பாளையத்தில் நடைபெறும் அரசு விழாவில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள நூலகம் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, எ.வ வேலு, அன்பில் மகேஷ், வெள்ளகோவில் சாமிநாதன், செந்தில் பாலாஜி, அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று கோவை விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், கோவை விமான நிலையத்திற்கு மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இரவு 7 மணி துவங்கிய கூட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 240 திமுக நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர். நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், 2026-ல திமுக ஆட்சி தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கோவை மக்களின் வரவேற்பு இருந்ததாக பெருமித்துடன் பேசினார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு மெமு ரயில் (06106/06107) கோவை – திண்டுக்கல் – கோவை இடையே இயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பண்டிகை முடிவடைந்த நிலையில் மேலும் இந்த சிறப்பு விரைவு ரயில் (வழி: போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம்) இம்மாதம் (நவம்பர்) முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து ஏனைய நாட்களில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை தனியார் மருத்துவமனையில் 8 மாத ஆண் குழந்தையின் தொண்டையில் சிக்கிய வெள்ளி மெட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. 2 நாட்களுக்கு மேலாக உணவு உட்கொள்வதில் சிரமம் (ம) மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை சிடி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை செய்த மருத்துவர்கள், உணவு குழாயில் மெட்டி இருப்பது கண்டுபிடித்தனர். பின் எண்டோஸ்கோப்பி முறையில் வெற்றிகரமாக மெட்டியை இன்று அகற்றினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.23 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதியின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தலைமைச் செயலாளர் முருகானந்தம் முதன்மைச் செயலாளர் சிட்கோ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கார்த்திக் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக் கலந்து கொண்டனர்.
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் சுமார் 165.00 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுவரும் செம்மொழிப்பூங்கா கட்டுமானப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். இதில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் என பலரும் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை காந்திபுரம் அனுப்பர்பாளையத்தில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டி, விழாப் பேருரை ஆற்றஉள்ளார். நாளை காலை காந்திபுர பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விழாவை முடித்துவிட்டு விமானம் மூலம் கோவையில் இருந்து சென்னை செல்கிறார்.
Sorry, no posts matched your criteria.