India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாநகர காவல் துறை சார்பில் இன்று ஒரு முக்கிய செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது. அதில் 14வயது வரை உள்ள அனைவரும் குழந்தைகள் தான், அவர்களை எந்தவிதமான வேளையிலும் ஈடுபடுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும் குழந்தை தொழிலாளர்கள் சம்பந்தமான புகார்களுக்கு 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கோவை மாநகர காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி இன்று கூறியதாவது. நாளை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளார். முதற்கட்டமாக கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் நவீன பால்பண்ணையில் ஆய்வு நடத்த உள்ளதாகவும், தேசிய பால்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 60 சதவிகித மானியம் குறித்து விவாதிக்க உள்ளார் என கூறினார்.
முருகப்பெருமானின் ஏழாம் படை வீடு என அழைக்கப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை நடக்கிறது. காலை 6:30 மணிக்கு கோ பூஜை உடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து மூலவரிடம் சண்முகார்ச்சனை நிகழ்ச்சியும் 11 மணிக்கு உற்சவரிடம் சண்முகார்ச்சனையும் நடக்கிறது. பிற்பகல் 3 மணி அளவில் அன்னையிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்றும், இன்றும் கோவையில் முகாமிட்டு கள ஆய்வு மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். தொடர்ந்து அவர் தனது எக்ஸ் தளத்தில் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கோவையில் தந்தை பெரியார் பெயரிலான நூலகம் மற்றும் அறிவியல் மையம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார். திராவிட இயக்கம் என்பது அறிவியல் இயக்கம் என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
➤கோவையில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “2026”-ல் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்றார். ➤புதிய நூலகம் (ம) அறிவியல் மையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். ➤முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் “அஜித்தே கடவுளே” என கோஷம் எழுப்பிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. ➤பொள்ளாச்சி அருகே பேருந்து நேர்க்கு நேர் மோதியதில் 8 பேர் காயம் அடைந்தனர்.
கோவை அனுப்பர்பாளையத்தில் 8 தளங்களுடன் கட்டப்படவுள்ள நூலகம் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா முதலமைச்சர் இன்று முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டி சிறப்பித்தார். பின்னர் அவர் பேசுகையில், கோவையில் அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த Comeback கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி. அவருடைய சிறப்பான, வேகமான செயல்பாடுகளை பார்த்து சில தடைகளை ஏற்படுத்தினார்கள். தடைகளை உடைத்து மீண்டும் வந்திருக்கிறார்.
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காந்திபுரம் சிறைச்சாலையில் மைதானத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் எட்டு தளங்களுடன் அடிப்பரப்பில் அமைய உள்ள 1,98,000 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார். இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். முதல்வர் மேடை ஏறும்போது ‘அஜித்தே கடவுளே’ என்று சிலர் கோஷம் எழுப்பினர்.
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்வை காண கோவையிலிருந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து காலை 9.05 மணிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து மாலை 6:20-க்கு திருச்செந்தூர் சென்றடையும். இதற்கான பயண கட்டணம் ரூ.350 வசூலிக்கப்படுகிறது. திருச்செந்தூர் செல்பவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
எனக்கு கமிஷனரை நல்லா தெரியும் என்று கூறுபவர்களை நம்ப வேண்டாம் எனவும், எந்த பிரச்னையாக இருந்தாலும் தினமும் பகல் 12 மணி முதல் 2 மணி வரை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் என்னை நேரடியாகச் சந்திக்கலாம் என கோயம்புத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனத்தின் சார்பில் புதிதாக திறக்கப்பட்ட கட்டடத்தின் மூலம் 3,500 பேர் பணிபுரியும் வகையில், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தின் இறுதியில் இருந்து முழுமையாக செயல்பாட்டுக்கு வரவுள்ளது என்றும் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கண்ணன் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.