Chennai

News November 14, 2024

சென்னையில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுங்கள்.

News November 14, 2024

அரையிறுதிக்கு முன்னேறிய மணிப்பூர்

image

எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் தேசிய சீனியர் ஹாக்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் கால் இறுதியில், பஞ்சாப் – மணிப்பூர் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 3-3 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. வெற்றி – தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், மணிப்பூர் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

News November 13, 2024

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 13, 2024

டாக்டர் மீது தாக்குதல் – தமிழிசை கண்டனம்

image

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது, வேதனை அளிக்கக் கூடியது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில், மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது என்பதையே இது காட்டுகிறது. மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

News November 13, 2024

அரசுப் பேருந்தில் சென்றால் பைக், டிவி, பிரிட்ஜ் பரிசு

image

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் நவ.21ஆம் தேதி முதல் வரும் ஜனவரி 20ஆம் தேதி வரை பயணிப்போருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பண்டிகை காலங்களில் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்கும் வகையில் இந்த குலுக்கல் முறை நடைபெறும். முதல் பரிசு பைக், 2ஆவது பரிசு ஸ்மார்ட் டிவி, 3ஆவது பரிசாக பிரிட்ஜ் வழங்கப்படும்.

News November 13, 2024

மருத்துவருக்கு கத்திக்குத்து: 2 பேர் கைது

image

கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சிகிச்சைக்கு வந்த 4 பேர் மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

News November 13, 2024

ஆன்லைன் ரம்மியால் ஐ.டி. ஊழியர் தற்கொலை

image

ஆன்லைன் ரம்மி மற்றும் பிட்காயின் முதலீட்டில் ரூ.60 லட்சம் வரை பணத்தை இழந்த சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் சரண் குமார் (32) நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தோழிக்கு வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பி வைத்துவிட்டு, அவர் தற்கொலை செய்துள்ளதாகக் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும்,போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 13, 2024

நவம்பர் 15, 16, 17இல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

சென்னையில், வரும் நவ.15ஆம் தேதி பௌர்ணமி, நவ.16, 17 வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது. நவ.15ஆம் தேதி கிளாம்பக்கத்தில் இருந்து 460 பேருந்துகளும், 16ஆம் தேதி 245 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உதவியாக இருக்கும்.

News November 13, 2024

விரைவில் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடங்கள்

image

சென்னையில், 46.36 சதுர மீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய அனைத்து வசதிகளுடன் கூடிய பெண்களுக்கான உடற்பயிற்சி கூடங்கள், விரைவில் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, கட்டப்பட்டு வரும் இந்த ​​உடற்பயிற்சி கூடங்கள், 6 – 9 மாதங்கள் காலக்கெடுவுடன் கட்டப்படுகின்றன. இதில் பல்வேறு உடற்பயிற்சி வசதிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. பெண்கள் இந்த உடற்பயிற்சி சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

News November 13, 2024

காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

image

சென்னை பெருநகர காவல்துறை, பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து உதவி எண்களையும் நேற்று அறிவித்துள்ளது. அவை: குழந்தை பாதுகாப்புக்கு – 1098, பெண்கள் உதவிக்கு – 181, காவல் கட்டுப்பட்டு அறைக்கு – 100, சைபர் குற்றத்திற்கு – 1930, ரயில்வே போலீஸ் – 9962500500, இரவு பயணத்தின்போது பெண்கள் பாதுகாப்பு உதவி எண் – 1091 ஆகிய எண்களை அறிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த எண்களை நோட் பண்ணி வச்சுக்கோங்க.