Chennai

News November 15, 2024

துணை முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

சென்னை மாநகராட்சியில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, போக்குவரத்து மற்றும் சாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான உயர்நிலை ஆய்வுக் கூட்டம் துணை முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக முன்னுரிமை கொடுத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டிய சாலைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

News November 15, 2024

சென்னையில் வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்

image

சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும், தங்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில், வரும் சனி மற்றும் ஞாயிறு (நவ.16, 17) வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. புதிய வாக்காளர் பதிவு, வாக்காளர் பெயர் திருத்தம், மற்றும் பெயர் நீக்கம் போன்ற அனைத்து சேவைகளுக்காக நடைபெறுகிறது. QR கோடு ஸ்கேன் செய்து இணையத்திலும் படிவத்தை சமர்ப்பிக்கலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2024

கிண்டி மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு

image

சென்னை கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பித்தப்பை கல் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரும்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் மரணம் அடைந்துள்ளார். மருத்துவர்கள் இல்லாததே விக்னேஷ் உயிரிழப்பிற்கு காரணம் என உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News November 15, 2024

2ஆவது நாளாக அமலாக்கத்துறை சோதனை

image

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 2ஆவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் போயஸ் தோட்டத்தில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, மார்ட்டினுக்கு தொடர்புடைய ரூ.451 கோடி சொத்துகளை முடக்கிய நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடைபெறுகிறது. விதிகளை மீறி ரூ.910 கோடி வருவாய் ஈட்டியது தொடர்பாக வருமான வரித்துறையினர் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

News November 15, 2024

சென்னையில் அதிக விபத்துகள் நடக்கும் பகுதிகள்

image

சென்னையில் அதிகபட்சமாக கத்திப்பாரா சந்திப்பை GST சாலையுடன் இணைக்கும் பகுதிகளில் 223 விபத்துகள் நடந்துள்ளன. மதுரவாயலில் 143 விபத்துகளும், கோயம்பேட்டில் 104 விபத்துகள் நடந்திருக்கின்றன. பூந்தமல்லி ஹைரோடு, அண்ணா ஆர்ச்சையொட்டியுள்ள பகுதிகளில் 190 விபத்துகள், நேப்பியர் பாலத்தில் 155 விபத்துகள் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அதிவேகமாகவும், தவறான பாதையில் வாகனங்களை இயக்குவதும்தான்காரணம்.

News November 15, 2024

சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள்

image

சபரிமலை பக்தர்கள் வசதிக்காக சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நவ.19, 26, டிச.3, 10, 17, 24 , 31, ஜன.7, 14 ஆகிய தேதிகளில் சென்ட்ரலிருந்து இரவு 11:20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 2:30 மணிக்கு கொல்லம் சென்றடையும். இதேபோல், நவ.20, 27, டிச.4, 11, 18, 25, ஜன.1, 8, 15 ஆகிய தேதிகளில் கொல்லத்திலிருந்து மாலை 4:20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11:35 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

News November 15, 2024

சைபர் குற்றங்களுக்கு எதிராக போலீசார் விழிப்புணர்வு

image

சென்னை பெருநகர காவல்துறை, பொதுமக்களிடம் சில வேண்டுகோளை விடுத்துள்ளது. அதன்படி, OTP-ஐ பகிர்ந்துகொள்ளக்கூடாது. கிரெடிட் கார்டு விவரங்களை தேவையில்லாமல் பகிர வேண்டாம். சந்தேகத்துக்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சைபர் குற்றப் புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க

News November 15, 2024

சென்னையில் இரவும் எமக்கானதே” பாலின சமத்துவ பேரணி

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் பாலின சமத்துவ பேரணி, அண்ணா சாலை, தந்தை பெரியார் சிலையிலிருந்து உழைப்பாளர் சிலை வரை நவம்பர் 16 இரவு 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அதற்கான போஸ்டரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி வெளியிட்டார். மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

News November 15, 2024

“சரியான சிகிச்சை செய்யவில்லை என்று யார் சொன்னது?”

image

சைதாப்பேட்டையில் நேற்று மாலை உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து பேட்டியளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியம், “மருத்துவர் பாலாஜி சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று யார் சொன்னது? அரசு மருத்துவமனை என்றாலே அங்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற புரிதல்தான் வெளியே வருகிறது. மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகிறார்கள். அதைத் தாண்டி சொல்பவர்கள் எதை வேணாலும் சொல்லலாம்” என்று தெரிவித்தார்.

News November 14, 2024

சென்னையில் இன்று பாலிகிளினிக் அலோசனை முகாம்

image

சென்னை மாநகராட்சி பாலிகிளினிக்குகள் இன்று மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை செயல்படும். இந்த நேரங்களில் சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலே உள்ள புகைப்படத்தில் எந்த இடத்தில் நடைபெறவுள்ளது என்ற தகவல் உள்ளது.