India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இன்றும், நாளையும் 21 – 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பி.எம். வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 12 மாத இலவச திறன்பயிற்சி வழங்கப்படுகிறது. கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் பயிற்சியில் மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை, ரூ.6,000 மானியம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 044-25201163, 9946640017. ஷேர் பண்ணுங்க.
சென்னை விமான நிலையத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று (மார்.10) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “உங்களின் ஆதரவு, வரவேற்புடன் சேர்ந்து எனது வெற்றிக்கு இறைவன் அருள்புரிந்தான். ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கின்றனர். நான் சாதாரண மனிதன்தான். இன்று வரை எனது கால்களில் நடந்து, எனது கால்களிலேயே நான் நிற்கிறேன். 82 வயது ஆகிவிட்டதே என நினைக்க வேண்டாம். இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறேன்” என்றார்.
பெண் ஆடையணிந்து ஆண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பிக்பாஸ் பிரபலம் விக்ரமனின் வீடியோ இணையத்தில் கசிந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், அது சினிமா ஷூட்டிங் என்றும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் விளக்கமளித்தார். படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்ட வீடியோவை தவறாக சித்தரித்து வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விக்ரமனின் மனைவி திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத 973 வாகனங்களை வரும் மார்ச் 26ஆம் தேதி ஏலம் விட போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். ஏலத்திற்கான முன்பதிவு வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் எனவும், ஏலத்தில் விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கான தொகையை மறுநாள் முழுமையாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.
பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த லிங்கை <
பெண் உள்ளாடையுடன் ஓடி பெண்களுக்கு பாலியல் கொடுத்ததாக பிக்பாஸ் பிரபலம் விக்ரமனின் வீடியோ இணையத்தில் கசிந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், அது சினிமா ஷூட்டிங் என்றும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் விளக்கமளித்தார். படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்ட வீடியோவை தவறாக சித்தரித்து வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விக்ரமனின் மனைவி திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிக்பாஸ் பிரபலம் விக்ரமன், பெண்கள் அணியும் உள்ளாடையுடன் ஓடி பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இணையத்தில் வீடியோ கசிந்தது. இதுகுறித்து அவர் கூறிய விளக்கத்தில், “சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த ஒன்றை அடிப்படை ஆதாரமின்றி, உண்மைத்தன்மையை ஆராயாமல் ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என்னைப்பற்றி அவதூறு பரப்புவதை விடுத்து வேறு வேலை இருந்தால் பாருங்கள்” எனத் தெரிவித்தார்.
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் இன்று (மார்ச்.10) லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் வெளியே செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க
சென்னையில் இன்று (09.03.2025) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதியாக மருந்தியல் துறையில் இளங்களை அல்லது டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். மாதம் ரூ.35,400 – 1.30 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 18- 59 வயதிற்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
Sorry, no posts matched your criteria.