India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குழந்தைத் தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டு வர நீங்கள் உதவலாம் என பெருநகர சென்னை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், குழந்தை தொழிலாளர்கள் ஏதேனும் கடைகளில் பணியமர்த்தப்பட்டிருந்தால் அதுகுறித்து புகார் பதிவு செய்ய 1098 குழந்தை உதவி எண்ணை அழைக்கவும் என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைப் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும். ஷேர் பண்ணுங்க
‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல்நல குறைவால் காலமானார். கல்லீரல் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சுரேஷ் சங்கையா உடல் கோவில்பட்டி அருகில் இருக்கும் அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட இருக்கிறது.
பாஜக பிரமுகர் சரத்குமார் அவர்கள் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், விஜய் மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்கிறார். ஆனால் அவர் குடும்பத்தில் எல்லோரும் இந்தி படிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்தி படிக்க வேண்டாம், மும்மொழிக் கொள்கை வேண்டாம் என அவர் எப்படி சொல்ல முடியும்? என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கேள்வி எழுப்பினார்.
பராமரிப்பு பணிகளால் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே, வரும் 17ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கடற்கரை – பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயங்கும். செங்கல்பட்டு, காஞ்சி, திருமால்பூர், அரக்கோணம் செல்லும் ரயில்கள் அட்டவணைப்படி இயங்கும் என சென்னை தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தகவல் மையம் 24.01.2025 வரை செயல்படும். தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இத்தகவல் மையச் சேவையினை கட்டணமில்லா தொலைபேசி எண்களான 044-28339999 0 1800 425 1757 ஆகியவற்றில் அழைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக, கூடுதலான எண்ணிக்கையில் காவலர்கள் ரோந்து சென்று அனைத்து மருத்துவமனைகளையும் கண்காணிக்கவும், இரவு நேர பாதுகாப்பையும் அதிகரிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டிலிருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் பம்பை வரை இயக்கப்படுகின்றன. இன்று முதல் ஜனவரி 16 வரை தினமும் பம்பை வரை அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. டிசம்பர் 26 முதல் 29-ம் தேதி வரை 4 நாட்கள் மட்டும் கோயில் நடை சாத்தப்படுவதை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் அரசியலுக்கு வந்தது வரவேற்கத்தக்கது எனவும், ஆனால் யாரும் சொல்லாத விஷயத்தை விஜய் அழுத்தமாக சொல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார் பாஜக பிரமுகர் சரத்குமார். மேலும், விஜய்யை போல திரையுலகில் மிகவும் உச்சத்தில் இருந்த போதுதான் நானும் அரசியலுக்கு வந்தேன். பொறுப்புடன் இருக்க வேண்டுமென பாஜகவில் இணைந்தேன். பொறுப்பு எதிர்பார்த்து இணையவில்லை என தெரிவித்தார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்று சென்னை பெருங்களத்தூர் மேம்பாலத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் மேம்பாலத்தில் இருந்து குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்ட நிலையில், வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நின்று ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் முன்னறிவிப்பு இன்றி இன்று 10 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கொல்கத்தா, புவனேஸ்வர், பெங்களூரு, திருவனந்தபுரம், சிலிகுரி செல்ல வேண்டிய 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பெங்களூரு, திருவனந்தபுரம், புவனேஸ்வர், கொல்கத்தா, சிலிகுரியிலிருந்து சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. முன்பதிவு செய்து பயணிக்க இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.