Chennai

News November 16, 2024

மாமல்லபுரம் கடலில் குளித்த 2 பேர் மாயம்

image

அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கிரீஷ்(20) மற்றும் ரியாஸ்(18), வீட்டில் மெரினா பீச்சுக்கு செல்வதாக கூறிவிட்டு, நண்பர்களுடன் மாமல்லபுரம் சுற்றுலா வந்துள்ளனர். அங்கு, 5 பேரும் கடலில் குளித்தபோது, கிரிஷ் மற்றும் ரியாஸ் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர். இருவரையும் மாமல்லபுரம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீனவர்கள் உதவுயுடன் தேடி வருகின்றனர்.

News November 16, 2024

மின் வாரியத்துக்கு எதிராக ஓய்வூதியதாரர்கள் தர்ணா

image

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலக பின்புறத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 500க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கூறினர்.

News November 16, 2024

ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

image

சென்னை ஊர்க்காவல் படையில் சேர விரும்புவர்கள் 18-50 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்கள் 45 நாட்கள் பயிற்சி பெற்று, காவல் நிலையங்களில் பணியிடப்படுவர். ரூ.560 ஊதியம், சீருடை, தொப்பி, ஷூ வழங்கப்படும். விண்ணப்பங்களை சைதாப்பேட்டையில் பெறலாம். மேலும், விவரங்களுக்கு 94981 35190, 95667 76222 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 16, 2024

17ஆம் தேதி மின்சார ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்

image

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வரும் 17ஆம் தேதி மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். அந்த நாளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ரயில் சேவைகள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்நேரத்தில், கடற்கரை-பல்லாவரம் இடையே பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். செங்கல்பட்டு – காஞ்சிபுரம், செங்கல்பட்டு – அரக்கோணம் பகுதி ரயில்கள் இயங்கும்.

News November 16, 2024

புதிய வாக்காளர் படிவ விவரம்: பதிவு செய்யும் முறைகள்

image

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், படிவம் 6 – புதிய வாக்காளருக்கான படிவம், படிவம் 6A – வெளிநாடு வாழ் வாக்காளருக்கான படிவம், படிவம் 6B – வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல், படிவம் 7 – பெயரை நீக்குதல், சேர்க்க, ஆட்சேபனை தெரிவித்தல், படிவம் 8 – முகவரி மாற்றம், வாக்காளர் பட்டியலில் திருத்தம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான படிவம் என்று தெரிவித்துள்ளது.

News November 16, 2024

போதையில்லா தமிழ்நாடு ரீல்ஸ் போட்டி 

image

தமிழ்நாடு அரசு சார்பாக ‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில், ரீல்ஸ், போஸ்டர் டிசைன், மீம்ஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாராட்டுச் சான்றிதழ் வழங்க உள்ளார். தங்களது படைப்புகளை tndiprmediahub@gmail.com என்ற TNDIPR மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 16, 2024

வாக்காளர் பட்டியலில் மாற்றமா? சேர்க்கணுமா?

image

18 வயது நிரம்பியும் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் Form-6 மூலம் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். தங்கள் தொகுதிக்குள்ளயே ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு குடிப்பெயர்ந்தவர்கள் மற்றும் வேறு சட்டமன்ற தொகுதிக்கு குடிப்பெயர்ந்து புது இருப்பிடத்தில் உள்ளவர்கள் அந்த இருப்பிடத்திற்கான ஆதாரத்தை இணைத்து அளிக்க வேண்டும். மேலும் <>voters.eci.gov.in<<>> என்ற இணையதளம் மூலமும் செய்யலாம்.

News November 16, 2024

சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம்

image

சென்னையில் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரின் பெயர் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை இதில் சரிப்பார்த்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்றவற்றை வாக்காளர்கள் மேற்கொள்வதற்கு வசதியாக நவ.16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

News November 16, 2024

குழந்தை தொழிலாளர்கள் புகார் எண் அறிவிப்பு

image

குழந்தைத் தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டு வர நீங்கள் உதவலாம் என பெருநகர சென்னை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், குழந்தை தொழிலாளர்கள் ஏதேனும் கடைகளில் பணியமர்த்தப்பட்டிருந்தால் அதுகுறித்து புகார் பதிவு செய்ய 1098 குழந்தை உதவி எண்ணை அழைக்கவும் என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைப் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும். ஷேர் பண்ணுங்க

News November 16, 2024

‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குநர் காலமானார்

image

‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல்நல குறைவால் காலமானார். கல்லீரல் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சுரேஷ் சங்கையா உடல் கோவில்பட்டி அருகில் இருக்கும் அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட இருக்கிறது.